மார்ச் 08, சென்னை (Health Tips): உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் தாக்கத்தினை எதிர்கொள்ள இயலாத நிலை மருத்துவ நிலையில் மன அழுத்தம் எனப்படுகிறது. இவற்றில் கடுமையான மனஅழுத்தம், எபிசோடிக் மனஅழுத்தம், நாட்பட்ட மனஅழுத்தம் என மூன்று வகைகளும் இருக்கின்றன. ஒரு தனிநபரின் பணிச்சுமை, பணி சார்ந்த பிரச்சனைகள், சர்க்கரை நோய், புற்றுநோய், உடற்பருமன் போன்ற விஷயங்கள் உடல் ரீதியான பிரச்சனையாக கருதப்படுகிறது. அதேபோல, கடன், நிலையில்லாத வருமானம், அதிர்ச்சியாக்கும் விபத்துகள், குடும்பத்தில் நிலவும் தொந்தரவு அல்லது பிரச்சனை ஆகியவை இருக்கின்றன. இயல்பாகவே மனிதனுக்கு நாளொன்றுக்கு 9 மில்லி முதல் 11 மில்லி வரை கார்டிசோல் ஹார்மோன் சுரக்கும்.
மனஅழுத்தம் கூடினால் இரத்த சர்க்கரையும் அதிகரிக்கும்: நமக்கு மனஅழுத்தம் ஏற்படும் பட்சத்தில் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு என்பது இயல்பை விட 10 மடங்கு அதிகரிக்கும். மனரீதியான அழுத்தம் காரணமாக அட்ரீனலின், நார்அட் ஹார்மோன்களின் அளவும் உடலில் அதிகளவு சுரக்கும். இவை அனைத்தும் இன்சுலினின் எதிர்மறை நிலையினை அதிகரிக்க வழிவகை செய்யும். இதனால் இன்சுலின் செயல்திறன் குறைந்து, இரத்த சர்க்கரை அளவு என்பது வெகுவாக அதிகரிக்கும். இவ்வாறான பிரச்சனைகளை தவிர்க்க தினமும் குறைந்தது 6 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை சரியான நேரத்தில் உறங்குவது, யோகா, உடற்பயிற்சி, தியானம் செய்து மனதை சமநிலைப்படுத்துவது, மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடப்பது உண்டான முயற்சியை மேற்கொள்ளலாம். இதனால் மனஅழுத்தம் கட்டுப்பட்டு இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதும் குறையும். Ujjwala Beneficiaries: சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு உற்சாக செய்தி; மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! விபரம் இதோ.!
மனஅழுத்தத்தை குறைப்பதற்கான பிற வழிமுறைகள்:
- மனரீதியான அழுத்தத்தை குறைக்க, நீரிழிவு சார்ந்த நோயாளிகள் குறைந்தது 20 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுதல் வேண்டும். ஓடுவது, நீந்துவது ஆகிய பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
- முகரீதியான கவலையை நீக்குவதற்கு அவ்வப்போது சிரித்து மகிழலாம்.
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தங்களின் நேரத்தை திட்டமிட்டு செலவிடலாம்.
- நினைவாற்றலுக்கான பயிற்சி, தியானம், யோகாசனங்கள் செய்யலாம்.
- தன்னம்பிக்கையுடன் இருத்தல், என்னால் முடியும் என்ற சுயஉறுதி நம்பிக்கை, நமது மனஉளைச்சலை பிறரிடமும் திணிக்காமல் இருத்தல் நல்லது.