Couple Enjoy Age Limit: மெனோபாஸ் நிலை வந்தால் பெண்களின் அந்த உணர்வு பறிபோகுமா?.. உண்மை என்ன?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!
புதிதாக திருமணம் செய்த தம்பதிகளைப்போல, மெனோபாஸ் காலத்திலும் கணவன் - மனைவிகள் தனிமை அவசியம்.
நவம்பர் 23, சென்னை (Lifestyle): திருமணமான பின்னர் தம்பதிகள் (Married Couple) தங்களை ஒருவரையொருவர் மனரீதியாக புரிந்துகொண்ட, தங்களின் இல்லறத்தை வெளிப்படுத்த கட்டிலில் இணைகின்றனர். இந்த இணைவு காதலில் (Love & Sex) அங்கமான காமத்தால் நடக்கிறது. கட்டிலில் நடக்கும் அன்பின் உச்சகட்ட பரிமாற்றமாக தாம்பத்திய (Couple Enjoy Bed) விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். இன்று காதலோடு தாம்பத்திய உணர்வும் இறுதிவரை இருபாலருக்கும் இருக்குமா? என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்வின் இறுதி நாட்கள் வரை உணர்வு அவர்களுடன் இருக்கும். இது ஆணுக்கும் - பெண்ணுக்கும் இடையேயான இணைப்பை பலப்படுத்தும். முந்தைய களங்களில் பெண்கள் ஆணின் விருப்பத்திற்காக செயல்பட்ட காலங்கள் மலையேறி, இன்றளவில் இருவரும் புரிந்துவிடும் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, மெனோபாஸ் காலத்திற்கு பின்னர் பெண் தனது உணர்வுகளை மனதிற்குள் புதைந்து யோகிபோல வாழ வேண்டும் என்ற நிலையானது மாறியுள்ளது.
பெண்கள் காதல், அன்பு, பாசம் என அனைத்தையும் இளையவயதில் எப்படி ஏங்கி பெற்றார்களோ, அதேபோலத்தான் இறுதிவரை விரும்புகின்றனர். தாம்பத்திய விஷயத்திலும் வயது முதிர்ந்தபின் உடல்நிலையால் இளமையில் செய்த கொண்டாட்டம் இயலாது எனினும், சிறிய அளவிலான முத்தம் உட்பட செல்லசீண்டலை விரும்புகின்றனர். இவை பலருக்கும் முந்தைய காலங்களில் புரியாத விஷயமாக இருக்கும். ஆனால், இன்று உள்ளங்கையில் நமது உலகத்தை வைத்து ஒவ்வொன்றையும் ஆழமாக தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது. அதனை நாமே நல்வழியில் பயன்படுத்த வேண்டும். India vs Australia T20I: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் டி20 போட்டிகள் இன்று தொடக்கம்: முழு விபரம் இதோ.!
தனது விருப்பங்களை வாய்திறந்து சொல்லாமல் மறைத்து தனக்குள் வைத்து புழுங்கிய பெண்கள் ஏராளம். மெனோபாஸ் காலகட்டம் நெருங்கியதும் ஹார்மோனல் மாற்றம், உடல்-மனம் சார்ந்த பிரச்சனை காரணமாக அவதிப்படும்போது, அன்றுவரை ஆவலுடன் தோளோடுதோள் நின்ற கணவர், வயதாகிவிட்டது, பேரன்-பேத்திகள் வந்துவிட்டார்கள் என்ற அலட்சியத்துடன் மனைவியை பராமரிப்பது இல்லை. அவர்களுக்கு இதுபோன்ற தருணங்கள் கணவரை தேடும். அவர்களே ஆறுதலாய் இருப்பார்கள்.
புதிதாக திருமணம் செய்த தம்பதிகளைப்போல, மெனோபாஸ் காலத்திலும் கணவன் - மனைவிகள் தனிமை அவசியம். உடலில் வலு இருப்பின், அவர்கள் தனிமையிலும் இருக்கலாம். இதுவே அவர்களின் மனசோர்வை போக்கும். மெனோபாஸ் என்பது பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது ஆகும். தொடர்ச்சியாக 12 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருக்கும் பட்சத்தில், அது மாதவிடாய் இறுதியை எட்டியதாக கருதலாம். புரோஜெஸ்டிரான், ஈஸ்டிரோஜன் ஹார்மோன் சுரப்பு நின்று, பெண்ணின் இனப்பெருக்கம் என்பது முடிவுக்கு வருகிறது. இது இயல்பாக பெண்களுக்கு 45 வயது முதல் 52 வயதுக்குள் நிகழலாம்.
கருமுட்டைகள் உயிர்ப்புடன் இருக்கும் இளவயதில் தனது துணையுடன் நெருங்கி கருவுற்ற பெண், கருமுட்டைகள் தனது இறுதி தருவாயே எட்டியதும் கருவுற இயலாது. இது உடலின் முதிர்ச்சிக்கு முதல் படியாக கருதப்படுகிறது. மெனோபாஸ் காலத்தில் பிறப்புறுப்பில் பாலிய வயதில் சுரந்த ஹார்மோன் சுரக்காமல் இருப்பதால், உடலுறவின் போது வலி ஏற்படும். அதனாலேயே பலரும் உடலுறவை மெனோபாஸ் காலத்திற்கு பின் தவிர்க்கிறார்கள். விருப்பம் இருப்பின் தம்பதிகள் உராய்வை குறைக்கும் கிரீம்களை மருத்துவரின் பரிந்துரையோடு வாங்கி பயன்படுத்தலாம்.
இக்காலங்களில் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், அதிலும் கவனமாக இருக்க வேண்டும். எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். தனது துணையின் மனநிலையை புரிந்துகொண்டு, காதல் உணர்வோடு அணுகினால் அனைத்தும் சாத்தியமே.