Baby Care: குழந்தை பராமரிப்பில் தப்பி தவறியும் இதனை செஞ்சிடாதீங்க.. தாய்மார்களே கவனமாக இருங்க.!
மருத்துவர்கள் கூறுவதை கேட்காமல் அனுபவ வைத்தியத்தை வைத்து சிகிச்சை அளிப்பது, குழந்தைகளுக்கான பிரச்சனைகளை கவனிக்காமல் நாட்டு மருத்துவம் செய்து வருகின்றனர்.
டிசம்பர், 10: பிறந்த பச்சிளம் குழந்தைகளை கவனித்துக்கொள்வதில் (Baby Care) மருத்துவர்களின் ஆலோசனைப்படி பலரும் நடப்பது இல்லை. மருத்துவர்கள் கூறுவதை கேட்காமல் அனுபவ வைத்தியத்தை வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கவனிக்காமல் நாட்டு மருத்துவம் மற்றும் பொதுவான மருத்துவத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தை ஆரோக்கியத்துடன் வளர்வதற்கு தாய்ப்பால் மிக முக்கியமானது ஆகும். குழந்தையை பிரசவித்த பின்னர் முதல் 2 நாட்களுக்கு பெண்களுக்கு சுரக்கும் Clostrum பாலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகளவு உள்ளது. இதனை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.
கட்டாயம் 6 மாதங்கள் வரையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். சிலர் குழந்தையை குளிக்க வைத்துவிட்டு வாயோடு வாய் வைத்து ஊதும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். பால் எடுக்கிறோம் என தாயின் நெஞ்சை பிடித்து அழுத்துவார்கள். #ViralVideo: எப்படி வந்து சிக்கிக்கிட்டேன் பார்த்தீங்களா?.. டூ வீலர் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமான குரங்கு..!
மூக்கில் எண்ணெய் விட்டு, குழந்தையை தலைகீழாக ஆட்டுவார்கள். இவையெல்லாம் தவறான வழிமுறைகள் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனால் அவற்றை மேற்கொள்ள வேண்டாம். குழந்தையின் பராமரிப்பில் இளம் தாய்மார்களின் உடல்நலமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தண்ணீர் குடிப்பதை குறைத்து, பத்திய சாப்பாடு, பால் கொடுக்க வேண்டும் என்பதால் சரியான உறக்கமின்மை என இருப்பார்கள். அப்படி இல்லாமல் தேவையான அளவு தண்ணீர் குடித்து, சத்தான உணவுகளை சாப்பிட வரவேண்டும். பத்தியம் என்று எப்போதும் களி சாப்பிட கூடாது.
சரியான உறக்கம் இல்லாத பட்சத்தில் அடிக்கடி எரிச்சல் போன்ற உணர்வும் மேலோங்கும். அதனை தவிர்க்க உறக்கம் அவசியம் ஆகும். அதனைப்போல, சிறுவயதில் எடுத்துக்கொள்ளவேண்டிய தடுப்பூசியை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.