Trendy Saree Draping Styles: "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.." வித்தியாசமான ஸ்டைலில் சேலை கட்டுவது எப்படி?.!

புடவை கட்டுவது எப்படி? கத்துக்கலாம் வாங்க!

Models (Photo Credit: Pixabay)

மே 08, சென்னை (Chennai): வெஸ்டன் கலாச்சாரம் வந்த போது பெண்கள் சேலை, தாவணியை மறந்து ஜீன்ஸ்க்கு மாறினார்கள் என்பது உண்மைதான். ஆனால் தற்போது இருக்கும் பெண்களுக்கு சேலை கட்டுவதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. விஷேசங்கள் பண்டிகைகளுக்கு விதவிதமான ஸ்டைலில் சேலைகள் கட்டுகின்றனர். அதோடு நாம் பாரம்பரிய முறையில் சேலை கட்டுவதையும் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். கிராமத்தில் பாட்டிகள் இன்று வரை அது போன்ற ஸ்டைலில் தான் சேலை (Saree Draping Styles) உடுத்துகின்றனர்.

பிங்கோசு சேலை (அ) கண்டாங்கி சேலை: இந்த சேலை முதுகுபுறம் இடுப்பில் மடிப்புகள் வைத்துக் கட்டும் சேலை முறையாகும். பின் பகுதியில் மடிப்புகள் எடுத்து பாவாடையில் சொருகி வைத்து உடல் முழுவது ஒரு முறை சுற்றி வந்த பின், முந்தியில் மீண்டும் மடிப்புகள் எடுத்து மேலே போட்டு விடலாம். முன்புறம் ‘U’வடிவத்தில் வரும் அதை பக்காவாட்டில் சரி செய்து மீதி வரும் துணியை கொசுவம் பக்கதில் சொருகிவிட வேண்டும். மிக எளிமையாக கட்டும் முறையாகும் இந்த பின் கொசுவம் சேலை. இடையில் ஒரு ஒட்டியாணம் அணிந்து முழு பாரம்பரிய தமிழ் பெண்ணாக பொங்கல் வைக்கலாம். Man Dies of Electrocution: மழையின் போது மின்கம்பத்தில் கை வைத்த நபர்.. சம்பவயிடத்திலேயே மின்தாக்கி பலி.. வைரலாகும் வீடியோ..!

தோத்தி ஸ்டைல் சேலை: இந்த சேலை நடனம் ஆடும் போது வேலைகள் செய்யும் போது கட்டும் சேலை முறையாகும். இந்த சேலை கட்ட உள்பாவாடை தேவையில்லை. வலது பக்க அதி்கமாகவும் இடது பக்கம் சிறியதாகவும் இருக்குமாறு சேலையை பிரித்து இடுப்பில் பின்னிருந்து முன் கொண்டுவந்து முடிச்சுப்போட்டு கொள்ளவும். இடது பக்கம் சிறியதாக இருக்கும் பகுதியை காலுக்கு அடியில் விட்டு எடுத்து இறுதியில் மடிப்புகள் வைத்து பின்புறம் சொருக்கிக் கொள்ளவும். பின் அதன் அடிபாகத்தை எடுத்து மீண்டும் மடிப்புகள் அமைத்து முன்புறம் முடிச்சு கட்டிய இடத்தில் சொருக வேண்டும். அடுத்து வலது பகுதி துணியை காலினுள் விட்டு அதே போல் முந்தியில் மடிப்பு எடுத்து தோலின் மேல் எப்பவும் போல போட்டுக் கொள்ளவும். இப்போது பக்கவாட்டில் மீதி துணி இருக்கும். அதை மீண்டும் மடிப்பு எடுத்து இடது பகுதியைப் போல் பின்புறம் நடுவில் சொருக்க வேண்டும். பேண்டு போல தான் இருக்கும் இதனால் எளிதாக வேலை செய்யவும் ஓடி ஆடவும் முடியும். ஏன் சண்டை கூட போட முடியும்.



தொடர்புடைய செய்திகள்

Bathroom Design Ideas: பட்ஜெட்டுக்குள் குளியல் அறை கட்டுவது எப்படி? டிப்ஸ் இதோ.!

Belt Saree: பெண்களின் முக்கிய பிரச்சினைக்கு அசத்தல் தீர்வு.‌. புடவைக்கு மேட்சிங்கான பெல்ட்.. விபரம் உள்ளே.!

Trendy Saree Draping Styles: "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.." வித்தியாசமான ஸ்டைலில் சேலை கட்டுவது எப்படி?.!

Pudina Pongal Recipe: சத்தான புதினா வெண்பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

Egg Pakoda Recipe: முட்டை வச்சு மொறுமொறுப்பான பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

Astrology: 2025 ஆம் ஆண்டு மிருகசீரிடம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

Astrology: 2025 ஆம் ஆண்டு ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!