
பிப்ரவரி 17, சென்னை (Chennai News): பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று உடலிற்கு ஏற்ப பொருத்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது. ஏனெனில் பொருத்தமான ஆடைகளை எப்போதும் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். உயரமான பெண்களை விட குட்டையான பெண்களுக்கு இது சற்று கடினம் தான். சில ஆடைகள் அவர்களை மேலும் குள்ளமாக காட்டும். ஆனால் சில ஆடை ஹேக்குகள் மூலம் உயரமாக தோற்றமளிக்கலாம். அந்த வகையில் சற்றே உயரம் குறைந்த பெண்கள் அணிவதற்கு ஏற்ற ட்ரெண்டி உடைகளை பற்றி ஒரு சிறிய தொகுப்பு உங்களுக்காக… Ice Bath: பிரபலங்களின் ஐஸ் பாத்.. எவ்வாறு ஐஸ்ஸில் குளிப்பது? தவிர்க்க வேண்டியவர்கள் யார்? விபரம் உள்ளே.!
உயரமாக தெரியவதற்காக சில டிப்ஸ்:
* நீண்ட குர்தாவுடன் கணுக்கால் வரை உயரமுள்ள பேண்ட் அணியும் போது உங்கள் கால்கள் சற்றே நீளமாக தெரியும். மேலும் இது ஒல்லியாகவும் காட்டும். ஸ்பிளிட் டாப் மேலும் பொருத்தமாக இருக்கும்.
* கருப்பு நிறம் பொதுவாகவே உடலை வடிவமாகவும் ஒல்லியாகவும் காட்டும். குட்டையான உயரமுடையவர்கள் கருப்பு மற்றும் அடர் நிற புடவைகள், சுடிதார்கள் உயரமானவர்களாக காட்டுகிறது.
* குள்ளமான பெண்களுக்கு பொதுவாகவே புடவைகள் பொருத்தமாக இருக்காது. அதிலும் சற்று குண்டானவராக இருந்தால் மேலும் பருமனாக காட்டும். இதற்கு தீர்வாக பெண்கள் புடவைகளை தேர்வு செய்கையில் செங்குத்துக்கோடுகள் இடம் பெறுவது போன்றதாக தேர்வு செய்ய வேண்டும். மெல்லிதாக இருக்கும் புடவைகள் எடுப்பது கூடுதல் அழகாக்கும்.
* பாலஸ்ஸோ எனப்படும் பேண்ட்டோடு லாங் டாப்புகள் உயரமானவர்களாக காட்டும். இதை அணிகையில் ஹை ஹீல்ஸையும் அணிந்தால் கச்சிதமாக பொருந்தும்.
* ஜீன்ஸில், ஹை வேஸ்ட் ஜீன்ஸ்கள் குட்டையான பெண்களை உயரமாக காட்டும். மேலும் இதனுடன் கிராப் டாப் பொருத்தமானதாகும். சற்று பருமனானவர்கள் ஃப்ரீ சைஸ் டீசர்ட்டுகளை இதனுடன் அணியலாம்.