அக்டோபர் 04, புதுடெல்லி (Construction Tips): பொதுவாக வீடு கட்டுபவர்கள், பட்ஜெட்டிற்குள் மார்டனாக வீடு கட்ட நினைப்பர். குளியல் அறையில் சில மாற்றங்களை செய்தால் அதுவும் பார்க்க அழகாவும் மார்டனாக இருக்கும். குளியலறையில் சோப்பு, ஷாம்பு, கண்டிஷனர், பாடி வாஷ், பேஷ் வாஷ், ஸ்க்ரப் என பல வகையான பொருட்களை வைக்கின்றனர். இதற்கு பிளாஸ்டிக் அல்லது மெட்டலில் விதவிதமான ஸ்டாண்ட்கள், கப்போர்டுகளை வைத்து அலங்கரிக்கின்றனர். ஆனால் இது சிறிய குளியலறையாக இருந்தால் இடத்தை அடைத்துக் கொள்ளும். அதில் பல பொருட்கள் வைக்கவும் முடியாது ஒரு பொருள் எடுத்தால் எல்லா பொருட்களும் படபடவென விழுந்து விடும். இதற்கான தீர்வை வழங்குகிறோம். World Animal Day 2024: உலக விலங்குகள் தினம்.. இந்தியாவில் உள்ள செல்லப்பிராணிகள் சட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோமா?!
இதற்கு பதிலாக குளியலறையில் இந்த பொருட்களை வைப்பதற்கு சுவற்றிர்குள்ளேயே ஸ்டாண்டை போல இடைவேளி விட்டு கட்டலாம். அதாவது சுவறில் பாக்ஸ் போல் எந்த அளவிற்கு வேண்டுமோ அதை இடைவேளி விட்டு கட்டலாம். இது புது வீடு கட்டுபவர் மட்டுமின்றி ஏற்கனவே கட்டியவர்களும் இவ்வாறு மாற்றி அமைக்கலாம். இந்த வகையில் அமைக்கும் போது குளியலறையில் எக்ஸ்டிரா ஸ்பேஷ் கிடைக்கும். இதற்கு கதவுகள் வேண்டுமானாலும் கீழிலிருந்து மேல் நோக்கி திறக்கும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இது குளியலறைக்கு கூடுதல் அழகை அளிக்கும்.