Hug Benefits: கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்; ஆய்வில் ருசிகர தகவல்.. எல்லாரும் கட்டிப்பிடி வைத்தியம் பண்ணுங்க.!
உலகளவில் நடந்துவரும் பல்வேறு ஆய்வுகளில், கட்டிபிடித்தல் கவனிக்கத்தக்கது. ஏனெனில் மனிதன் தனது இழப்பின் போது மனவலியால் தவித்தாலும், அவனை சரிசெய்யும் மருந்து கட்டிப்பிடிப்பது ஆகும்.
ஏப்ரல் 17, பெர்லின் (Berlin): ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, அரவணைப்பதால் (Hug Advantages Tamil) ஏற்படும் நன்மைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. இதற்காக சுமார் 130க்கும் மேற்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை பெற்று, 10 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களின் விவரங்களை தனித்தனியே சேகரித்து அதனை ஆய்வுக்குட்படுத்தியுள்ளது.
பதற்றம், வலி நீங்கும்: இந்த ஆய்வின் முடிவில் அரவணைப்பது அல்லது கட்டியணைப்பது மற்றும் மென்மையான தொடுதல் போன்றவை மனிதர்களிடம் நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரவணைப்பதன் மூலமாக ஒரு நபருக்கு மனச்சோர்வு மற்றும் பதற்றம், வலி ஆகியவை குறைவதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவுகள் நேச்சர் ஹியூமன் பிஹேவியர் (Nature Human Behaivor) இதழில் கடந்த ஏப்ரல் 8, 2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. National Banana Day 2024: வரலாற்றில் வாழைப்பழ தினம் இன்று; அமெரிக்கா தேடிய முக்கிய கனி.. ஆச்சரியமூட்டும் தகவல்.!
எல்லோரும் கட்டிப்பிடியுங்கள் (Kattipidi Vaithiyam): மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் அரவணைப்பு என்பது பல்வேறு நன்மைகளை வழங்கியுள்ளது. இன்றளவில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு அரவணைக்கும் விஷயத்தில், குழந்தை வளரும் வரை அது சார்ந்த நன்மைகள் ஏற்பட்டாலும் பின் நாட்களில் அரவணைப்பு குறைவதன் காரணமாக, அதனால் ஏற்பட்ட நன்மைகள் அனைத்தும் மாயமாகிறது. இது ஒரு அறிவாற்றல் நரம்பியல் விளைவு என்று கூறும் ரூல் பல்கலைக்கழகம் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜூலியன், அரவணைத்தல் தொடர்பான தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறுகிறார்.
அரவணைப்புக்கான சக்தி: மேலும், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் அரவணைப்பதால் பயன்பெறுகின்றனர். குழந்தைகள் விஷயத்தில் முதலில் அரவணைப்பு வழங்கும் பெற்றோர், ஒரு காலத்தில் அதனை கைவிடுகின்றனர். இவ்வாறானவை இருக்கக் கூடாது. அரவணைப்பு என்றுமே மனச்சோர்வை நீக்கும் தன்மை கொண்டது. ஒரு கட்டத்தில் பெற்றோர்களால் கைவிடப்படும் அரவணைப்பு, அவர்களது காதலர் அல்லது துணையால் கிடைக்கிறது. எனினும், பெற்றோரின் அரவணைப்புக்கு கூடுதல் சக்தி உண்டு.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)