Oreo Biscuits: குட்டிஸ் விரும்பும் ஓரியோ பிஸ்கட்டில் கேன்சரை பரப்பும் கெமிக்கலா? நெட்டிசன்கள் பரபரப்பு குற்றசாட்டு.. உண்மை இதோ.!

சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற ஓரியோ பிஸ்கட், தன்னகத்தே கேன்சரை பரப்பும் வேதிப்பொருளை கொண்டதாக உறுதியற்ற தகவல் அதிகம் பகிரப்படுகிறது.

Oreo Biscuit Under Fire (Photo Credit: @WallStreetApes X)

டிசம்பர் 21, புதுடெல்லி (New Delhi): மொன்டெலெஸ் இன்டெர்நேஷ்னல் (Mondelez International) & நபிஸ்கோ (Nabisco) எனப்படும் அமெரிக்க உணவுத்தயாரிப்பு நிறுவனத்தால், கடந்த 112 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பிஸ்கட் வகை நொறுக்குத்தீனி ஓரியோ (Oreo Biscuit). தற்போதைய வணிக உலகின் விரிவாக்கத்துக்கு ஏற்ப, ஓரியோ பிஸ்கட்டுகள் உலகளவில் சந்தைப்படுத்தப்படுகிறது. விற்பனை உலகின் மிகப்பெரிய சந்தையாக இருக்கும் இந்தியாவிலும், ஓரியோ பிஸ்கட்டுகள் மிகப்பெரிய இடத்தை தக்கவைத்துள்ளன.

சந்தேகத்திற்கு இடமான வீடியோ வைரல்:

அமெரிக்காவின் உணவுத்தரக்கட்டுப்பாட்டு மையம் போல, இந்தியாவின் மத்திய உணவு & தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகள், இந்திய சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பை கொண்டுள்ளன. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி, மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஓரியோ பிஸ்கட்டை ஒருவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனித்தனியே எரித்து காண்பிக்கிறார். அப்போது, தொடக்கத்தில் இருந்து அதிக நேரம் வரை எரிக்கப்படும் பிஸ்கட் ஒன்றும் ஆகவில்லை. Meditation Day Awareness Programme: தியான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தேவகோட்டை கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..! 

தீயில் எரிந்து பிஸ்கட்டுக்கு ஒன்றும் ஆகவில்லை:

அதில் பயன்படுத்தப்படும் கிரீம் ஒருகட்டத்தில் உருகி வழிந்தாலும், பிஸ்கட் என்பது அப்படியே இருக்கிறது. இதனால் ஓரியோ பிஸ்கட்டில் உயிருக்கு ஆபத்தான கெமிக்கல் பயன்படுத்தப்படுவதாகவும், இது கேன்சரை உண்டாக்கும் என்றும், இவ்வாறான மோசமான உற்பத்தி முறைகொண்ட ஓரியோ பிஸ்கட்டையே பலரும் விரும்பி சாப்பிடுவதாகவும் நெட்டிசன்கள் பல தகவல்களை பகிர்ந்து வீடியோவை வைரலாகி இருந்தனர். இதனால் ஓரியோ விரும்பிகள் பலரும் அதிர்ந்துபோயினர்.

கோகோ மரங்கள்:

மொன்டெலெஸ் நிறுவனம் தனது ஓரியோ உற்பத்திக்காக கோகோ எனப்படும் சாக்லேட் தயாரிப்பு மூலப்பொருளை பயன்படுத்துகிறது. இவை இயற்கையாக கோகோ எனப்படும் (Theobroma Cacao) சாக்லேட் மரங்களில் இருந்து கிடைக்கும். இவ்வாறான சாக்லேட் மரங்கள் மேற்கு ஆப்ரிக்காவில் அதிகம் இருக்கும் நிலையில், அதனை பெற ஓரியோ தலைமை நிறுவனம் பல செயல்களில் ஆப்ரிக்காவில் ஈடுபட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் பொருட்டு இவ்வாறான தகவல் பகிரப்படுவதாகவும் கூறப்படுகிறது. Cashew Cake: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் முந்திரி கேக் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..! 

எலான் மஸ்கின் கோர்க் ஏஐ (Gork AI) கூறும் தகவல்:

ஓரியோ பிஸ்கட்டில் உள்ள அதிக சர்க்கரை, பாதுகாப்பான அடுக்கை உருவாக்கும். பனை எண்ணெய், பிஸ்கட் விரைந்து எரிவதில் இருந்து பாதுகாக்கும். சோயா லெசித்தின் வெப்பத்தின் கீழ் பிஸ்கட்டை முடிந்தளவு பாதுகாக்கும். கோகோ கலக்கப்பட்டு, முன்னதாகவே அவை பேக்கிங் முறையில் தயார் செய்யப்படுவதால், பிஸ்கட் எரிய இயல்பாகவே சற்று தாமதம் ஆகும் அல்லது குறிப்பிட்ட நேரம் வகையில் அவை பாதுகாக்கப்படும். ஓரியோ நிறுவனத்தின் பேக்கிங்கில் கூறப்படும் மூலதனப்பொருட்கள் மற்றும் பிற சேர்மங்களை எடுத்துக்கொண்டால், ஓரியோவில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் ஏதும் இல்லை என கோர்க் ஏஐ தெரிவிக்கிறது.

ஓரியோ பிஸ்கட் மீது நெருப்பை படரவிட்டு சோதனை செய்ததாக கூறப்படும் காணொளி:

எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், வீடியோ உண்மைக்கு புறம்பான தகவலை கூறுவதாக விளக்கம்:

Note: நொறுக்குத்தீனிகள் என்பவை நொறுக்குதீனிகளாக இருக்கும் வரை எந்த பிரச்சனை இல்லை. மாறாக, அதனை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பசியை மறக்கும் உணவாக மாறும்போது, சத்துக்களே இல்லாத பொருட்களை நாம் சாப்பிடுவதில் எந்த பலனும் இல்லை என்பதை நினைவில் வைத்து பெற்றோர்களும் செயல்பட வேண்டும். பிஸ்கட்டை வாங்கி கொடுப்பது / மறுப்பது அவரவர் விருப்பம்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement