
டிசம்பர் 20, சென்னை (Kitchen Tips): டிசம்பர் மாதம் என்றாலே பலருக்கும் கிறிஸ்துமஸ் (Christmas Special Recipes) மற்றும் புத்தாண்டு தான் நினைவிற்கு வரும். அதிலும், குறிப்பாக கிறிஸ்துமஸ் என்றால் கிறிஸ்துமஸ் தாத்தா, பிளம் கேக், கிறிஸ்துமஸ் மரம், குடில் போன்ற பல விஷயங்கள் உள்ளது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இனிப்பு பரிமாறுவது உண்டு. அந்தவகையில், வீட்டிலேயே சூப்பர் டேஸ்ட்டி முந்திரி கேக் (Christmas Special Cashew Cake) எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முந்திரி - 1 கப்
பால் - 1/2 கப்
சர்க்கரை - 1.1/4 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 மேசைக்கரண்டி Astrology: 2025 ஆம் ஆண்டு உத்திராடம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
செய்முறை:
முந்திரிப் பருப்பை வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து, அடுப்பில் சட்டி காய வைத்து, சிறிது நெய் விட்டு அரைத்த விழுதை சேர்க்கவும். இப்போது, அதனுடன் சர்க்கரை, சிறிது சிறிதாக நெய் சேர்த்து, கலந்து வேக விடவும். கலவை நெகிழ்ந்து வரும் போது ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டி படும் வரை கிளறவும். இதன்பிறகு, கலவை உருட்டும் பதம் வந்த உடன், நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் வில்லைகள் போடவும். அவ்வளவுதான், அருமையான முந்திரி கேக் (Munthiri Cake) தயார்.