Thiruvarutprakasa Vallalar: அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாள் இன்று... கருணையுடன் ஒவ்வொருவரும் வாழ வள்ளலாரை போற்றுவோம்.!

கருணைக்கடலாகவும், அருட்பெருஞ் ஜோதியாகவும் வாழ்ந்து மறைந்த வள்ளலாரின் பிறந்தநாள் இன்று ஒவ்வொரு உயிருக்கும் கருணை வழங்கும் வகையில் நாம் சிறப்பிப்பது, அருட்பிரகாச வள்ளலாருக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

அக்டோபர் 05, வடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், மருதூரில், கடந்த 5 அக்.1823ம் ஆண்டு ராமையா பிள்ளை - சின்னம்மையார் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக பிறந்தவர் ராமலிங்கர். தான் பிறந்த ஆறு மாதத்தில் தந்தையை இழந்த ராமலிங்கர், இளவயதை சென்னையில் உள்ள ஏழு கிணறு பகுதியில் கழித்தார். பின் அன்னான் சபாபதியின் சமய சொற்பொழிவால் ஆன்மீகத்தின் பாதையில் ஈர்க்கப்பட்டவர், சர்வ மதத்தில் இருக்கும் உண்மை ஒன்றே என்ற கொள்கைக்கு ஏற்ப, "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்ற இயக்கத்தை தோற்றுவித்து, சாதிய-மத ரீதியான பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக எதிர்த்தார். Classical Language Status: இந்தியாவில் மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து.. என்னென்ன மொழிகள் தெரியுமா?! 

சத்ய ஞான சபை:

அன்றைய காலகட்டத்தியேயே சைவ சமயத்திற்குள் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள காரணமாக இருந்தவர், பழமைவாதிகளின் கடுமையான எதிர்ப்பை சந்தித்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் எனவும் கூறலாம். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என உரைத்து, ஒவ்வொரு உயிரையும் மதித்து, அதற்கு 3 வேளை இலவசமாக உணவளிக்கும் பாக்கியத்தை வழங்க முன்வந்து, கடலூர் மாவட்டம் வடலூரில் "சத்ய ஞான சபை"-ஐ நிறுவியர். அன்று அவர் ஏற்றிவைத்த சுடர், இன்று வரை அணையாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.

உறுதியேற்றிடுங்கள்:

பல இலட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் பசியாற்றும் தர்மசபை இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களிடமும் அன்பு காண்பிக்க வேண்டும் என்ற கொள்கையை உயிர்மூச்சாக கொண்டவர், எல்லா உயிரும் இன்புற்று வாழ்க என்ற பாடலுடன் மொத்தமாக ஆறாயிரம் பாடல்களை திருவருட்பாவாக பாடி தமிழ்ச் சமூகத்திற்கு தந்துவிட்டுச் சென்ற மூத்த படைப்பாளி இவர் ஆவார். வள்ளலாரின் சேவையை கருதி மத்திய அரசு கடந்த 2007ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது. மாநில அரசு அன்னதானத்திற்கு தேவைப்படும் பொருட்களை மிகக்குறைந்த விலையில் தருகிறது. வள்ளலாரின் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி, அவரின் வழியில் சாதி-மத, ஏற்றத்தாழ்வுகளை கடந்து மனிதராக மனிதத்துடன் வாழ்வோம் என அனைவரும் உறுதியேற்போம்.