Vishal - Sai Dhanshika Engagement (Photo Credit : @VishalKOfficial X)

ஆகஸ்ட் 29, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் புரட்சித்தளபதி என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விஷால். இதுவரை பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள விஷால், சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் மூலமாக மிகப் பெரிய கவனத்தை ஈர்த்தார். இதனை தொடர்ந்து புதிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் நேற்று சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்ற நடிகை சாய் தன்ஷிகாவின் "யோகி டா" திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். Madhampatty Rangaraj: "என்னை 7 மாத கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்" - மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்.! 

காதலை உறுதி செய்த நடிகை :

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்ட நிலையில், நடிகர் விஷாலும், சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், இருவரும் தங்களது காதல் மற்றும் திருமணம் தொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். தொடர்ந்து பேசிய விஷால், "நாங்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தோம். எங்களது நட்பு காதலில் விழுந்து தற்போது திருமணம் வரை சென்றுள்ளது. இதனை எங்களாலேயே நம்ப முடியவில்லை. இறுதிவரை அவரை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வதே எனது வாழ்நாள் குறிக்கோள்" என தெரிவித்தார்.

விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம் :

இந்த நிலையில் தனது 48-வது பிறந்தநாளை முன்னிட்டு விஷால் ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 29 ஆம் தேதியான இன்று விஷால் - சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் (Vishal - Sai Dhanshika Engagement) அவர்களது பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த விஷால், "எனது பிறந்தநாள் அன்று வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நான் இன்று ஒரு நல்ல செய்தியை பகிரப்போகிறேன். இன்று எனக்கும், சாய் தன்ஷிகாவிற்கும் எங்களது குடும்பத்தாரின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நிறைவடைந்தது. உங்களது வாழ்த்துக்களுக்கும், அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி" என தெரிவித்துள்ளார்.

விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்த புகைப்படங்கள் :