Rose Day: காதலர் வாரம் ஆரம்பம்.. முதல் நாளே ரோஸ் தினம்.. இதன் வரலாறு என்ன தெரியுமா?.!
காதலர் தின வாரத்தின் முதல் நாளாக ரோஸ் தினம் அனுசரிக்கப்பட்ட வருகிறது.
பிப்ரவரி 07, சென்னை (Chennai): இந்த உலகம் முழுவதுமே ஒரு சேர காதலின் அடையாளமாக ஒன்றை கருதுகிறது என்றால், அது ரோஜாப்பூ (Rose) தான். பொதுவாக பலர் தங்கள் காதலை முதலில் சொல்லும் பொழுது இந்த பூவை தான் வாங்கிக் கொண்டு செல்கின்றனர். இந்தக் காதலே வேடிக்கை தான்.. அந்த வேடிக்கையை வெளிக்காட்ட இந்த ரோஜா எப்போது இருந்து பயன்படுத்தப்படுகின்றது? என்பதனைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
வரலாறு: பொதுவாக ரோமன் இதிகாசத்தில் ரோஜா பூக்கள் மர்மம் மற்றும் வேக்கையின் அடையாளமாக காணப்படுகிறது. மேலும் இது அன்பும் மற்றும் அழகு கடவுள் உடன் தொடர்பு படுத்தப்படுகிறது. அதே நேரம் ஆசியா மற்றும் அரேபிய கலாச்சாரங்களில் ரோஜாக்கள் அன்பின் அடையாளமாக உள்ளது. இதன் நறுமணம் மற்றும் நிறத்தால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அதேநேரம் விக்டோரியாவை சேர்ந்தவர்கள் தான் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை வெளிக்காட்டுவதற்காக முதல் முதலில் ரோஜாக்களை கொடுக்க ஆரம்பித்தனர் என்று நம்பப்படுகிறது. Ooty Tragedy: உதகையில் கட்டுமான பணியின்போது மண்சரிவு.. 6 பேர் உயிரிழப்பு!
ரோஜா தினம்: இந்த ரோஜா தினம் அன்று நாம் நம் காதலர்களுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த தினத்தின் கோட்பாடு. இதற்காக நீங்கள் திடீரென்று சென்று பேசுவது, உங்கள் பார்ட்னருக்கு வியப்பாக இருக்கலாம். பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றலாம். எனவே இன்றைய நாளின் சிறப்பினை முன்னிட்டு உங்களுடைய பார்ட்னருக்கு ஒரு ரோஜாவை வாங்கிக் கொடுத்து, உங்கள் மனதில் தோன்றுவதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ரோஸ் கொடுக்க டிப்ஸ்: உங்க ஆளுக்குப் பிடித்த நிறத்தில் ரோஜாக்களை வாங்கி நீங்களே உங்கள் கையால் அலங்கரியுங்கள். குறிப்பாக சிவப்பு நிற ரோஜாக்கள் தான் காதலின் அடையாளம். அன்பின் நிறம். வண்ணங்களின் மேல் உங்கள் காதலனுக்கோ காதலிக்கோ ஆர்வம் அதிகமாக இருந்தால், மஞ்சள், பிங்க் இப்படி ஏகப்பட்ட நிறங்களில் கிடைக்கும் ரோஜாக்களையும் சேர்த்து வாங்குங்கள். ரோஜா வாங்கினால் போதுமா? உங்கள் மனதுக்குள் இருக்கும் காதலை கொஞ்சமாவது வெளிப்படுத்த வேண்டாமா? அப்படியே ஒரு காதல் கவிதையைத் தட்டி விடுங்க. நீங்கள் பெரிய கவிஞராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் மனதில் தோன்றியதை கவிதைகளை எழுதி அவர்களுக்கு கொடுங்கள். கண்டிப்பாக உங்கள் அன்பை பார்த்து மெய் மறந்து போய் விடுவார்கள்.