Ooty Land Slide (Photo Credit: @backiya28 X)

பிப்ரவரி 07, நீலகிரி (Neelagiri): நீலகிரி மாவட்டம் உதகை காந்தி நகரில் கட்டுமாண பணியின் போது திடீர் மண்சரிவு ஏற்பட்டு, தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து விபத்து (Ooty Construction Collapse) ஏற்பட்டு உள்ளது. இந்த திடீர் மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி பொக்லைன் உதவியுடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 6 பேர் சிக்கிய நிலையில் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஒரு தொழிலாளி இடிபாடுகளுக்கு அடியில் காணவில்லை, அவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மாவட்ட நிர்வாக தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Music Composer Vijay Anand Passes Away: பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!