Vaikunta Ekadasi: விண்ணைப்பிளந்த ரங்கா., ரங்கா கோஷம்: ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்.!

இன்று இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

Vaikunta Ekadasi | Sri Ranganathaswamy Temple 2023 (Photo Credit: @ANI X)

டிசம்பர் 23, ஸ்ரீரங்கம் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலில் (Sri Ranganathasway Temple) வைகுண்ட ஏகாதசி திருவிழாவினை முன்னிட்டு, இன்று (23 டிசம்பர் 2023, சனிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் சொர்க்க வாசல் (Paramapada Vasal) திறக்கப்பட்டது. அதேநேரத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில், மதுரை மேலூர் சுந்தர்ராஜப்பெருமாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உட்பட தமிழகமெங்கும் அமைந்துள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசலானது திறக்கப்பட்டது.

சொர்க்க வாசல் திறப்பு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரத்தினத்தால் ஆன அங்கி, கிளிமாலை, பாண்டியன் கொண்டாய் உட்பட சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படு செய்து, சந்தனமண்டபம், நாழிக்கோட்டான் வாயில், தங்கக்கொடிமரம் வழியே இரண்டாம் பிரகாரம் குலசேகரன் திருச்சுற்று சென்று, பின் நதி மண்டபத்தை வந்தடைந்தார். Man Bites Wife’s Nose: வரதட்சணைக்காக மனைவி மூக்கை கடித்த கணவர்… வலைவீசி தேடும் காவல்துறையினர்..! 

Vaikunta Ekadasi | Sri Ranganathaswamy Temple 2023 (Photo Credit: @ANI X)

பாதுகாப்பு ஏற்பாடு: அதனைத்தொடர்ந்து அதிகாலை சரியாக 04:45 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தர்கள் ரங்கா., ரங்கா என்ற கோஷத்துடன் முழங்கினர். கடந்த டிசம்பர் 12ம் தேதி தொடங்கிய வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் கொண்டாட்டம், இன்று சொர்க்கவாசல் திறப்பையொட்டி உச்சகட்டத்தை எட்டியது. பக்தர்கள் இலட்சக்கணக்கில் குவிந்துவிடுவார்கள் என்பதால் திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்படும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது. காவல் துறையினரும் பாதுகாப்பு கருதி ஸ்ரீரங்கத்தில் குவிக்கப்பட்டனர்.