Kallakadal Warning Update: கடற்கரைக்கு மறந்தும் போயிடாதீங்கா; 8 அடி வரை உயரும் அலை - தென் கடலோரமாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

இதனால் மக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவருத்தப்பட்டுள்ளது.

Dhanushkodi (Photo Credit: @Vasanth56540556 X)

ஜூன் 10, ராமநாதபுரம் (Ramanathapuram News): கடலில் எந்த விதமான லேசான அறிகுறியும் இன்றி, திடீரென பலத்த காற்று வீசி, கடல் கொந்தளித்து 3 மீட்டர் வரை அலை உயர எழும் நிகழ்வு கள்ளக்கடல் (Kallakadal Warning in Tamilnadu) என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு அரபிக்கடல் - இந்திய பெருங்கடல் - வங்காள விரிகுடா சந்திக்கும் இடங்களில் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. ஆனால், பெரிய அளவிலான உயிர் சேதங்கள் கடந்த சில மாதம் வரை இதனால் பெரிய அளவில் ஏற்பட்டது இல்லை. பொருட்சேதங்கள் என்பது கடலோரம் வசிக்கும் மக்களுக்கு பழகிப்போன ஒன்று ஆகும்.

கள்ளக்கடல் எச்சரிக்கை:

கடந்த 2012ம் ஆண்டுக்கு பின்னர் கள்ளக்கடல் என்பது உலகளவில் ஐ.நா மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ஜூன் 10ம் தேதியான நேற்று முதல் நாளை (ஜூன் 11) இரவு 11:30 மணி வரையில் கள்ளக்கடல் எச்சரிக்கை தேசிய கடல்சார் மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கடல்சார் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பில், தென்மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் கள்ளக்கடல் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. Dharmapuram Adheenam Case: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரம்; ஆதீனத்தின் முன்னாள் நேரடி உதவியாளர் வாரணாசியில் கைது.! 

அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கடல் கரையோரம் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கள்ளக்கடல் காரணமாக அலைகள் திடீரென 10 அடி உயரம் வரை எழக்கூடும். இதனால் கடலோரம் இருப்பவர்கள், கடற்கரையோரம் வசித்து வரும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் சூறைக்காற்று வீசுகிறது. மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகம் வரை வீசி வருகிறது. கடல் சீற்றம் இல்லை எனினும், அலைகளின் வேகம் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்கடல் ஆபத்தானது:

அதேபோல, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோரம் கவனமாக இருக்க வேண்டும். இம்மாவட்டங்களில் உள்ள கடலோரம் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடலில் இறங்கவும், குளிக்கவும், கடற்கரையோரம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மே மாதம் பலியான 8 உயிர்கள்: கடந்த மே மாதம் மொத்தமாக குமரி மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியில் நிகழ்ந்த கள்ளக்கடல் சீற்றத்தில் சிக்கி பயிற்சி மருத்துவர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.