Vacation At Sea: உலகைச்சுற்றும் வாலிபனாக வலம்வர ஆசையா? உங்களுக்கான அற்புத தகவல் இதோ.. 135 நாடுகளுக்கு கடலிலேயே சுற்றுலா.!

கடல் காற்று, நீல வானம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் எனக் கப்பல் பயணம் தனித்துவமான அனுபவத்தைத் தரக்கூடியது.

Boat (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 08, புதுடெல்லி (New Delhi): வாழ்நாளில் ஒரு முறையாவது கப்பலில் பயணம் செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உலகம் முழுவதும் சுற்றி பார்க்கும் (Ultimate Guide for Sea Lovers) கப்பல் பயணத்தை காட்ட வருகிறது லைஃப் அட் சீ குரூஸின், ‘எம்வி ஜெமினி’ கப்பல். உலகம் முழுவதும் சுற்றி பார்க்க நினைப்பவர்களுக்கு இது வாழ்நாளில் கிடைக்கும் அறிய வாய்ப்பு.

எம்வி ஜெமினி கப்பல்: இந்த நிறுவனத்தின் எம்வி ஜெமினி (MV Gemini) கப்பல் உலகத்தில் உள்ள 7 கண்டங்களில் 14 உலக அதிசயத்தில் 13 உட்பட, 135கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பல தீவுகளுக்கும் 3 ஆண்டுகளுக்கு பயணம் செல்லவிருக்கிறது. இதில் பயணிக்கும் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கப்பலின் உள்ளேயே இருக்கிறது. மேலும் இதில் பயணித்துக் கொண்டே பயணிகள் வேலை செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1,30,000 மைல்கள் கடந்து பயணிக்கும் இந்த ஜெமினியில் 400 அறைகள் மற்றும் 1,074 பயணிகள் தங்கும் விசாலமான அறைகள் உள்ளன. மேலும் 2 மீட்டிங் அறைகள் 14 அலுவலக அறைகள், ஒரு வணிக நூலகம், ஓய்வு எடுக்கும் லான்ச், கஃபே, ஸ்பா சென்டர்ஸ், மெடிடேஷன் வகுப்புகள், ஓவியம், ஃபோட்டோகிராபி, ஆர்ட் வகுப்புகள், 24 மணி நேரமும் நெட், வைஃபை, மருத்துவ வசதி என அனைத்தும் இதனுள்ளேயே உள்ளது. மேலும் பயணிகளை எப்போதும் எண்டர்டைனிங்காக வைப்பதற்கு கரோக்கி, சன்பாத், கால்ஃபிங், நடனம், கச்சேரி என பொழுபோக்கு நிழச்சிகளும் நடந்துகொண்டே இருக்கும். மற்றும் ஸ்போர்ட்ஸ், படங்கள், டாக்குமெண்டரிகள் அனைத்தும் திரையிடப்படுகிறது. Home Insurance Policy: பைக் இன்சூரன்ஸ் தெரியும்.. லைப் இன்சூரன்ஸ் தெரியும்.. ஆனா வீட்டுக்கு இருக்க இன்சூரன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா? விபரம் உள்ளே..!

விலை: மேலும் மது, உணவு அனைத்தும் நட்சத்திர ஹோட்டலில் இருப்பது போன்று மிக லக்சூரியஸாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெமினி தனது பயணத்தை நவம்பர் 1, இஸ்தான்புல்லிலிருந்து தொடங்குகிறது. கேட்கையிலேயே பயணிக்க ஆசை வருகிறதல்லவா? விலை தெரிந்து கொள்ள வேண்டாமா? ஜெமினியில் தேர்ந்தெடுக்கும் கேபினைப் பொருத்து $29,999 முதல் $109,999 வரை இருக்கிறது. இந்திய மதிப்புப்படி ரூ.24,74,269 முதல் ரூ.90,71,672 வரையாகும். விலை சற்று ஹார்ட் ஆட்டேக்கை தருவதாக இருந்தாலும் பயணித்தாலே வாழ்க்கையில் பல அனுபங்களைப் பெறலாம்.

அதிலும் கடல் கடந்த உலகளவிய பயணம் என்பது நிச்சயம் நமது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது போன்ற அனுபவங்கள் அனைவருக்கும் கிடைக்காததாகும். கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அனுபங்களைப் பெறலாம். எந்தெந்த நாடுகளில் கப்பல் (Boat) பிராயாணிக்க உள்ளதென்ற வழித்தட மேப், லைஃப் அட் சீ குரூஸ் இணையதளத்தில் 3 டியாக கொடுப்பட்டுள்ளது. மேலும் இதில் முன்பதிவிற்கான படிவமும் கொடுக்கப்பட்டுள்ளது. ரிஜிஸ்டர் செய்த பின் மற்ற விவரக் குறிப்புகளை அந்நிறுவனம் தெரிவிக்கும்.