Rohingya Refugee Boat Capsizes Near Malaysia (Photo Credit : @DataoftheWorld X)

நவம்பர் 10, மியான்மர் (World News): மியான்மர் நாட்டில் இருந்து ரோஹிங்கியர்கள் என்ற மக்கள் மலேசியாவுக்கு சட்டவிரோதமாக படகுகள் உதவியுடன் அகதிகளாக குடி பெயர்ந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் 100 க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றுக் கொண்டு படகு ஒன்று மியான்மரில் இருந்து புறப்பட்டு உள்ளது. மொத்தமாக மூன்று படகுகளில் 100 பேர் புறப்பட்ட நிலையில், தாய்லாந்து - மலேசியா எல்லைப் பகுதி வழியாக படகு சென்றுள்ளது. Japan Earthquake: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பேரலைகளுடன் தாக்கப்போகும் சுனாமி.. பதற்றத்தில் மக்கள்.!

படகு கவிழ்ந்து விபத்து:

அப்போது மலேசியா கடல் பகுதியான லங்காவி பகுதிக்கு சென்றபோது திடீரென படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த பலரும் நீரல் மூழ்கி தத்தளித்து இருக்கின்றனர். இதனை அடுத்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் கடற்கரையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக இவர்களில் 13 பேரை மட்டுமே அவர்களால் பத்திரமாக மீட்க முடிந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் வரை இதுவரை உயிரிழந்ததாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2 படகு மாயம்:

படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகி இருப்பதால் அவர்கள் கடலுக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், இரண்டு படகுகள் எங்கு சென்றது? என்ற தடையமும் இல்லை. இதனால் 100 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது.

மாயமான 100 பேரை மீட்கும் பணி தீவிரம்: