Juvenile Heart Attack: இளவயதில் ஏற்படும் மாரடைப்புகளை சரிசெய்வது எப்படி?.. இளம் தலைமுறையே தெரிஞ்சிக்கோங்க.!
இன்றளவில் இளம் பருவத்திலேயே ஏற்படும் மாரடைப்பு மரணங்களை தவிர்க்க நாம் உடல்நலனை பாதுகாப்பது அவசியமானது ஆகும்.
ஜூலை 14, சென்னை (Health Tips): எந்த விதமான வேலை என்றாலும், மனரீதியான அழுத்தம் இருக்கத்தான் செய்யும். நமது உடல்நலம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி ஆகிய விஷயங்களில் கவனத்தை செலுத்தி நேரம் செலவிடப்பட வேண்டும். எத்தனை வேலைகள் இருந்தாலும், அதற்கான நேர திட்டமிடலுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்வது நல்லது.
உடற்பரிசோதனை அவசியம்:
ஆண்டுக்கு ஒருமுறை முழு அளவிலான பரிசோதனை செய்வதால், உடலில் உள்ள பிரச்சனைகளை கண்டறியலாம். மேலும், மாரடைப்புக்கு வாய்ப்புகள் உள்ளதா? என அறிந்துகொள்ளலாம். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் கொண்டவர்கள், கட்டாயம் ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து, உடல் திறனை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. அபாயகரமான அறிகுறிகள் இருப்போருக்கு, நோயின் தீவிரத்தை பொறுத்து உடனடி சிகிச்சையும் வழங்க இயலும். PM Modi Condemn on Trump Shooting: டொனால்ட் ட்ரம்ப் மீது நடந்த துப்பாக்கிசூடு விவகாரத்தில், கொதித்தெழுந்த பிரதமர் நரேந்திர மோடி.. வன்மையான கண்டனம்.!
சிறுவயதில் இருந்து கற்பிக்க வேண்டும்:
குழந்தைப்பருவத்தில் இருந்து உணவு, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதனை குழந்தைகளின் கல்வி வயதில் இருந்து பயிற்றுவிக்க வேண்டும். சிறுவயதில் நாம் வழங்கும் சிறந்த ஆலோசனைகள் நன்மையை ஏற்படுத்தும். இன்றளவில் இருக்கும் இளம் தலைமுறை உடல் எடை, உணவுமுறை சார்ந்த பிரச்சனைகளுக்கு உடல் பரிசோதனை செய்து மருத்துவரை நாடலாம்.
உடற்பயிற்சி அவசியம்:
அதேபோல, தினமும் அரைமணிநேரம் நடைப்பயிற்சி செய்தல் மூலமாக உடலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இயலும், சிறிய அளவிலான படபடப்பு, பயம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதனை மாரடைப்போடு ஒப்பிட்டு அதிகம் பயம் வந்தால், ஒருசில நேரம் அது இதயத்தின் செயல்திறன் சீர்குலைவுக்கும் வழிவகை செய்யும். உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கம் சரியாக அமைந்தால், மாரடைப்பு ஏற்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.