IPL Auction 2025 Live

Most Dangerous Places: உலகளவில் ஆபத்துகளை கொண்ட சுற்றுலாத்தலங்கள் என்னென்ன தெரியுமா?..!

மலை சிகரங்களில் இருந்து வெப்பமண்டல பகுதிகள், அழகிய கடற்கரைகள் என பல இடங்கள் இருக்கின்றன.

Template: Death Valley California, Mount Everest Nepal, Kingston Jamaica, Bangkok Thailand

டிசம்பர், 9: சுற்றுலா பயணிகளை (Tourist Places) ஈர்க்க உலகளவில் பல கண்கவர் இடங்கள் இருக்கின்றன. மலை சிகரங்களில் இருந்து வெப்பமண்டல பகுதிகள், அழகிய கடற்கரைகள் என பல இடங்கள் இருக்கின்றன. நாம் சுற்றுலா செல்ல விரும்பும் சில இடங்களில் ஆபத்துகளும் (Most Dangerous Places) நிறைந்து இருக்கும். ஆகையால், வெளிநாடு சென்றால் எங்கு செல்லலாம்? என்பது குறித்த விரிவான தகவலை தெரிந்துகொள்வதும் அவசியம்.

மரண பள்ளத்தாக்கு, கலிபோர்னியா (Death Valley, California): உலகளவில் மரண பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் கலிபோர்னியாவின் டெத் பள்ளத்தாக்கு, 134 டிகிரி பேரன்ஹீட் வெப்பம் பதிவாகும் இடமாகும். இங்கு பள்ளத்தாக்கில் பிரதானமாக வாழும் ராட்டில் எனப்படும் கொடிய நச்சுள்ள பாம்பு வகைகளும் உள்ளன. அதிக வெப்பம், அழகிய மரங்கள், நஞ்சுள்ள பாம்பு, வெப்பத்தினால் ஏற்படும் பிரச்சனை என சுற்றுலா பயணிகளால் கவனிக்கப்பட்டாலும் ஆபத்தான இடமாக கலிபோர்னியாவின் மரண பள்ளத்தாக்கு உள்ளது.

டானகில் பாலைவனம், எத்தியோப்பியா (Ethiopia Desert): எரித்திரியா - எத்தியோப்பியா இடையே அமைந்துள்ள டானாகில் பாலைவனம், எத்தியோப்பியாவில் வெப்பமான பாலைவனத்தில் முக்கியமானது ஆகும். இது கலிபோர்னியா பள்ளத்தாக்குக்கு அடுத்தபடியாக 131 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும்  இடமாகும். இங்கு இருக்கும் அமில ஏரிகள் மற்றும் விஷ வாயுக்கள் காரணமாக இவை ஆபத்தான சுற்றுலா தளங்களில் இடம்பெற்றுள்ளது.

Danakil Desert, Ethiopia.

எவரெஸ்ட் சிகரம், நேபாளம் (Everest, Nepal): உலகளவில் மிகப்பெரிய மலைச்சிகரம், மலையேற்றம் செய்யும் வீரர்களால் பெரிதும் விரும்பப்படும் சிகரங்களில் ஒன்றாக இருப்பது எவரெஸ்ட். எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடியில் இருந்து 1200 ஆய்வாளர்கள் மேலே புறப்பட்டு செல்வார்கள். இவர்களில் பாதி ஆய்வாளர்கள் மட்டுமே தங்களின் இலக்கை சென்றடைவார்கள். எவரெஸ்ட் மலையின் உயரத்தால் ஆக்சிஜன் அளவு கணிசமாக குறையும் என்பதால் மரணமும் ஏற்படுகிறது. சராசரியாக தற்போது வரை அங்கு உயிரிழந்த 200 பேரின் உடல் மீட்கப்படாமல் உறைந்த நிலையில் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகாபுல்கோ, மெக்சிகோ (Mexico): அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ நாட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளால் அதிகம் விரும்பப்படும் இடங்களில் முக்கியமாக இருப்பது அகாபுல்கோ. இந்நகரின் நீலநிற கடல், கடற்கரை அழகு போன்றவை எழில்கொஞ்சும். ஆனால், இங்கு கொலை உட்பட குற்ற நடவடிக்கைகள் அதிகம் என்பதால், அது ஆபத்தான சுற்றுலா பயணங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. Eyes Problem: பேராபத்து.. செல்போன், டிவியை இப்படி உபயோகம் செய்கிறீர்களா?.. கண்களின் ஆரோக்கியத்தை அழிவில் இருந்து தடுக்க வழிமுறைகள்.!

கிங்ஸ்டன், ஜமைக்கா (Kingston, Jamaika): வெப்பமண்டலத்தின் சொர்க்கமாகவும், பாப் மார்லியின் தாயகமாகவும் இருப்பது ஜமைக்கா. இது ஸ்பானிஷ் மற்றும் பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் கீழ் இருந்தது. இங்குள்ள அழகிய கடற்கரைகளை கண்டுகளிக்க உலகளவில் மக்கள் திரள்வார்கள் என்றாலும், பின்தங்கிய கலாச்சாரம், வறுமை காரணமாக குற்ற சம்பவங்கள் அதிகம்.

ரியோ-டி-ஜெனிரோ, பிரேசில் (Rio-de-janeiro, Brazil): உலகளவில் முதன்மையான சுற்றுலாத்தலங்களில் முக்கியமானது பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ. இங்குள்ள அற்புத கடற்கரை, இயற்கையின் அழகு, பல்வகை கலாச்சாரம் அந்நகரை நல்ல சுற்றுலாத்தலமாக மாற்றுகிறது. ஆனால், பிரேசிலில் வேலையின்மை போன்ற பிரச்சனை அதிகரித்து மக்கள் ரியோவுக்கு வருகை தந்தும் விடிவுகாலம் இல்லை என்பதால் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

Rio-de-Janeiro, Brazil.

மவுண்ட் வாஷிங்டன், அமெரிக்கா (Mount Washington, America): அமெரிக்காவில் உள்ள மவுண்ட் வாஷிங்க்டன் சாகச சுற்றுலாப்பயணிகளால் விருப்பப்படும் இடங்களில் ஒன்றாகும். பனிச்சறுக்கு, ரிசார்ட், மலையேற்றம் என இயற்கையின் அழகை பல்வகைகளில் கண்டு களிக்கலாம். ஆனால், அங்குள்ள காற்று மணிக்கு 203 மைல் வேகத்தில் இருக்கும் எனபதால் மரணமும் ஏற்படலாம். வெப்பநிலை -40 டிகிரி பேரன்ஹீட் வரை செல்லும்.

பாங்காக், தாய்லாந்து (Bangkok, Thailand): உலகளவில் மில்லியன் கணக்கான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வெப்பமண்டல நாடுகளில் தாய்லாந்துக்கு தனி இடம் உண்டு. அங்குள்ள கடற்கரை மட்டுமல்லாது, மக்களின் இரவு வாழ்க்கை, வரவேற்பு, வரலாறு போன்றவை பல மில்லியன் சுற்றுலாப்பயணிகளை கவருகிறது. ஆனால், அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எதிரான செயல்பாடுகளால் தாய்லாந்து கவனமாக இருக்க வேண்டிய இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 11:35 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).