Man Suffers Stroke After Massage: மக்களே உஷார்! ஹெட் மசாஜ் செய்தவர்க்கு பக்கவாதம்.. காரணம் என்ன?!

கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள சலூன் கடை ஒன்றில் ஹெட் மசாஜ் செய்து கொண்ட இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Massage (Photo Credit: Facebook)

அக்டோபர் 01, பெல்லாரி (Karnataka News): கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு வயது 30. இந்த நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சலூன் கடைக்கு சென்று முடி திருத்தம் செய்யும் பொழுது, இலவசமாக தலைக்கு மசாஜ் செய்துள்ளார். மசாஜ் (Massage) செய்யும் பொழுது அவருக்கு கடுமையான கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு பேச முடியாமல் வாய் குழறியுள்ளது.

விரைவாக மருத்துவமனைக்கு சென்ற அவரினை ஆய்வு செய்வதில், அவருக்கு பக்கவாதம் (Stroke) வந்திருப்பதனை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதிக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ததால் கரோடிட் தமனி உடைபட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு மாதங்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு தான் அவரால் வீட்டிற்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளனர். Section 163 In Delhi: சமூக ஆர்வலர் போராட்டத்தின் எதிரொலி.. டெல்லியில் அக்டோபர் 5 வரை 163 தடை உத்தரவு..!

"மசாஜ் என்பது சாதாரணமான விஷயமல்ல. விஷயம் தெரியாத ஒருவரிடமோ, அதில் நிபுணத்துவம் பெறாத ஒருவரிடமோ சென்று ஹெட் மசாஜ் செய்துகொள்வது மற்றும் தலையில் சொடக்கெடுப்பது போன்ற சிகிச்சைகளைச் செய்துகொண்டால், நரம்பு விலகிக்கொள்ளும். இதன் காரணமாக, `பாரலிஸிஸ்’ எனப்படும் வாதம் ஏற்படக்கூட வாய்ப்புண்டு. சமீபத்தில் டெல்லியில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. இன்றைக்கு மருத்துவ உலகம் சந்தித்துவரும் பிரச்னைகளில் இது முக்கியமானது" என்கிறார் நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்.