அக்டோபர் 01, புதுடெல்லி (New Delhi): லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் நிலப் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும், அதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆறாவது அட்டவணையில் லடாக்கினை சேர்க்க வேண்டும், லடாக்கிற மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் (Climate activist Sonam Wangchuk) தொடர்ந்து, லடாக் மக்கள் ஆதரவுடன் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றார்.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பேரணியை ஏற்படுத்த உள்ளதாக கூறி இருந்தார். அதற்காக நேற்று இரவு அவர் டெல்லி வந்தடைந்தார். மேலும் அவருடன் 120 லடாக் போராளிகள் வந்திருந்தனர். அவர்களை டெல்லி காவல்துறை என டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களை தடுப்பு காவலில் வைத்தனர். இதனால் டெல்லியில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 5-Year-Old Boy Gang Raped: 5 வயது சிறுவன் நால்வர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.!
163 படி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் 5 நபா்களுக்கு மேல் கூட்டாக நடமாட கூடாது. லத்தி உள்ளிட்ட அனைத்து வகையான ஆயுதங்களும் எடுத்து செல்ல தடை. காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். பொது அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் போராட்டம், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. இந்த தடை உத்தரவு 1 ஆம் தேதி (இன்று) முதல் 5 ஆம் தேதி வரை 5 நாள்கள் அமலில் இருக்கும்.