Cobra Spotted Auto Rickshaw: ஆட்டோவில் ஏறி அதகளம் செய்த நல்ல பாம்பு: பார்ப்போரை படமெடுத்து மிரட்டிய பகீர் சம்பவம்.!
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஏனெனில் அதன் விஷம் படையையும் தாண்டி பலம்பெற்றது ஆகும்.
அக்டோபர் 12 , மும்பை (Social Viral): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, படல்பூர் (Badlapur Railway Station) இரயில் நிலையத்தில் இன்று மக்கள் வழக்கம்போல தங்களுக்கான பயணசீட்டுகளை வாங்கிக்கொண்டு, இரயில் பயணத்திற்குத் தயாராக இருந்தனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இரயில் நிலையங்களில் படல்பூரும் ஒன்று என்பதால், மக்கள் திரளாக இருந்தனர். இதற்கிடையில், இரயில் நிலையத்தில் பயணசீட்டு கொடுக்கும் இடத்தில் நல்ல பாம்பு ஒன்று தென்பட்டுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறவே, பதறிப்போன பாம்பு நம்மை மக்கள் எதோ செய்ய வருகிறார்கள் என எண்ணி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. மக்கள் பாம்பை கண்டு பதறியபடி ஓட்டமெடுத்தனர். PM Modi Perfoms Pooja at Parvati Kund: உத்திரகாண்டில் உள்ள பார்வதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!
மக்களை கண்டு அஞ்சி ஓட்டமெடுத்த பாம்பு, அங்கிருந்த ஆட்டோவின் பின்புறம் ஏறி மக்களை இதற்கு மேல் என்னை யாரும் நெருங்கி பார்க்க வேண்டாம். மீறினால் தீண்டிவிடுவேன் என்ற பாணியில் தனது முகத்தை ஆக்ரோஷமாக வைத்து மிரட்டியது.
இதனையடுத்து, காவல்துறையினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் வனத்துறையினர், பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இலாவகமாக பாம்பை அங்கிருந்து வெளியேற்றினர்.
உயிரை தாய்நாட்டிற்காக கொடுக்கத் துணித்து செல்லும் படையே பாம்பை கண்டால் நடுங்கும் என்பார்கள். சாதாரண மனிதன் என்ன செய்ய இயலும். சிலர் இதில் விதிவிலக்கு.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)