New Scam Alert: 65 வயது பாட்டியை 25 வயது பியூட்டியாக மாற்றும் மெஷின்.. மோசடி தம்பதியின் பலே ஐடியா..!

உத்தர பிரதேசத்தில் முதியோர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறோம் எனக்கூறி, பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி தலைமறைவாகியுள்ளனர்.

UP Couple | Time Machine File Pic (Photo Credit: @younishpthn X | Pixabay)

அக்டோபர் 04, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் (Kanpur) ‘பண்டி அவுர் பாப்லி’ என்பவர் டைம் மிஷின் மூலம் மக்களை 25 வயது போல் காட்டி ஏமாற்றி, சுமார் 35 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இவர் தனது மனைவியுடன் சேர்ந்து, ‘டைம் மிஷின்’ (Time Machine) மூலம் முதியோர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறோம் என்ற பெயரில், பலரை ஏமாற்றி, பல கோடி ரூபாய் மோசடி (Money Fraud) செய்து தப்பினர். இதனையறிந்த சிலர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பணமோசடியில் ஈடுபட்ட தம்பதி:

இதனையடுத்து, கான்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ‘பண்டி மற்றும் பாப்லி’ என்று கூறப்படும் நபரை வலைவீசி தேடி வருகின்றனர். முதலில் கித்வாய் நகரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பின்னர் முழு விஷயமும் வெளியில் தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில், முதியவர்களை 25 வயது இளமையாகக் காட்டுகிறோம் என்ற பெயரில், பலரை தம்பதியினர் ஏமாற்றியுள்ளனர். Classical Language Status: இந்தியாவில் மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து.. என்னென்ன மொழிகள் தெரியுமா?!

சிறப்பு கால இயந்திரம்:

மேலும், விசாரணையில் ராஜீவ் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி ஆகியோர் கோவிந்த்நகர் காவல்நிலையப் பகுதியில் ரிவைவல் வேர்ல்ட் (Revival World) என்ற பெயரில் சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளனர். இந்த மையத்தில் 65 வயது முதியவரை 25 வயது சிறுவனாக மாற்றும் சிறப்பு கால இயந்திரத்தை இஸ்ரேலிடம் (Israel) இருந்து ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கான்பூரில் அசுத்தம் அதிகமாக உள்ளது என்றும், இதனால் மக்கள் விரைவில் முதுமை அடைகின்றனர் என்றும் இருவரும் பலரை ஏமாற்றியுள்ளனர். இதனை நம்பி ஏராளமான முதியவர்கள் ரிவைவல் வேர்ல்டுக்கு படையெடுத்தனர்.

தம்பதி தலைமறைவு:

ஒரு சுற்று சிகிச்சைக்கு ரூ. 6 ஆயிரம் பெற்ற போதும், இளமையாக மாறாததால் முதியோர்கள் விழிப்படைந்தனர். இதுதொடர்பாக ராஜீவ் துபே மற்றும் ராஷ்மியிடம் கேட்ட போது அவர்கள் பல்வேறு காரணங்களை சொல்லி தப்பிக்க முயன்றுள்ளனர். ஒரு கட்டத்தில் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த அந்த மோசடி (Scam) தம்பதி தலைமறைவானது. விசாரணையில் இதுவரை 15 பேரிடம் இருந்து 35 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.