Trending Video: ஒன்றில் தொடங்கி 9ல் முடிந்த மெகந்தி: அசரவைக்கும் மெகந்தி கலைஞரின் சிந்தனைத்திறன்: வைரல் வீடியோ இதோ.!
இவை கலைஞர்களின் திறமைக்கேற்ப மாறுபடும். அதுசார்ந்த வைரல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
டிசம்பர் 17, சென்னை (Chennai): தெற்காசிய மக்களிடம் உடலை அலங்கரிக்கும் விஷயங்களில் பெருவாரியாக பின்பற்றப்பட்டு வந்தது மெகந்தி (Mehandi). இந்தியாவை சுதந்திரத்திற்கு முன்னர் கைப்பற்றி ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்கள், மெகந்தியின் மீது விருப்பப்பட்டு அதனை தங்களின் நடுவரை எடுத்துச்சென்றனர். பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் மெகந்தியை விரும்பி கைகளில் இட்டுக்கொள்கின்றனர்.
மெகந்தி: மருதாணி இலைகளில் இருந்து அரைத்து எடுக்கப்படும் கலவையை, நமது ஊர்களில் சாதரணமாக கைகள் மற்றும் கால்களில் வைத்துக்கொள்வார்கள். அதனை அலங்காரப்படுத்தி வைப்பது சார்ந்த கலை பின்னாளில் பலராலும் விரும்பப்பட்டது. இன்றளவில் திருமணங்களில் பெண்களுக்கு மெகந்தி முக்கியமான ஒன்றாக பலராலும் விரும்பப்படுகிறது. IND Vs SA ODI: இன்று தென்னாபிரிக்கா - இந்தியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் தொடக்கம்: முழு விபரம் இதோ.!
புதுப்புது முயற்சிகள்: இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுனிதா என்ற மெகந்தி கலைஞர் பதிவு செய்த வீடியோ வைரலாகி வருகிறது. அவர் பதிவிட்ட வீடியோவில், ஒன்றில் இருந்து ஒன்பது வரை எண்களை கையில் எழுதி, அதில் இருந்து அழகிய மெகந்தி ஓவியத்தை வரைகிறார். இந்த வீடியோ பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்று, தற்போது வரை 6 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.