Python Snapped Oldman Neck: கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு; முதியவரின் உயிரை காப்பாற்றிய சாதுர்ய செயல்..!
மதுபோதையில் இருக்கும் நபர்கள் அவ்வப்போது மலைப்பாங்கான பகுதிகளில் வீதிகளில் உறங்கும் பட்சத்தில், சில நேரம் வனவிலங்குகளின் தாக்குதலுக்கும் உள்ளாக நேரிடும்.
அக்டோபர் 23, கண்ணூர் (Trending Video): மேற்குத்தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ள கேரளாவில் வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது இயல்பானது. அங்குள்ள மக்களுக்கு வனவிலங்குகளுடன் ஒன்றி வாழ்ந்து பழகிவிட்டதால், அவர்களுக்கு அச்ச உணர்வு இருப்பினும், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்.
அதே நேரத்தில், மதுபோதையில் இருக்கும் நபர்கள் அவ்வப்போது மலைப்பாங்கான பகுதிகளில் வீதிகளில் உறங்கும் பட்சத்தில், சில நேரம் வனவிலங்குகளின் தாக்குதலுக்கும் உள்ளாக நேரிடும்.
கடந்த 2022 புள்ளி விபரப்படி, கேரளாவில் பாம்பு தீண்டி இறந்தவர்கள், குரங்குகளால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என தெரியவருகிறது. Sisters Died hit by Train: தண்டவாளத்தை அலட்சியமாக கடந்த வயோதிக சகோதரிகள் எக்ஸ்பிரஸ் இரயில் மோதி சாவு; ஆம்பூரில் சோகம்.!
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர், வளப்பட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் அருகே உறங்கிக்கொண்டு இருந்த முதியவரின் கழுத்தை மலைப்பாம்பு சுற்றிக்கொண்டது.
அதனை தாமதமாக உணர்ந்த முதியவர் தன்னை காப்பாற்றக்கூறி எழுந்து சாலையில் வந்து உதவிகேட்ட நிலையில், ஒருசிலர் பாம்பை கண்டு பயந்துபோயினர். வனத்துறையினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் நபர், உடனடியாக தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு பாம்பை விரட்டினார். பாம்பு அங்கிருந்து சென்றதும், மயக்க நிலையில் இருந்த முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)