அக்டோபர் 23, ஆம்பூர் (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர், காட்டுக்கொள்ளை பகுதியில் வசித்து வருபவர் சாவித்திரி (வயது 65). அங்குள்ள வளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் (வசந்தா வயது 64). சாவித்ரி - வசந்தா உடன்பிறந்த சகோதரிகள் ஆவார்கள்.
இருவரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உறவினரின் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆம்பூர் இரயில் நிலையம் வந்திருக்கின்றனர். இரயில் நிலையத்தில் பயணச்சீட்டையும் பெற்றுக் கொண்ட நிலையில், ஜே.பி எக்ஸ்பிரஸ் மூலமாக திருவள்ளுவர் செல்ல முற்பட்டுள்ளனர்.
அதற்காக நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல், நடைமேடையை தண்டவாளத்திற்கு இடையே நடந்து சென்று கடந்துள்ளனர். ICICI Fined by Consumer Commission: அமேசான் வெகுமதி புள்ளிகளை பணமாக மாற்றத்தை ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.76,691/- அபராதம் - நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.!
அப்போது, அவ்வழியாக வந்த மங்களூர் விரைவு இரயில் மோதி, சகோதரிகள் இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர், ஆம்பூர் இரயில் நிலையத்திற்கு விரைந்து சென்று சகோதரிகளின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது. இரயில் பயணத்தின்போது தண்டவாளங்களை அலட்சியமாக கடக்கக்கூடாது என பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், அலட்சியத்தினால் நடக்கும் விபத்துகள் தொடர்கதையாகின்றன.