Murugan Found In River: ஆற்றுக்குள் தோன்றிய ஆறு படையப்பன்.. திருவள்ளூர் மாவட்டத்தில் குவியும் பக்தர்கள்..!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் மூன்றரை அடி உயர கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Murugan (Photo Credit: @backiya28 X)

மார்ச் 15, திருவள்ளூர் (Tiruvallur): திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு (Tiruvalankadu) ஒன்றியம், பாகசாலை கொசஸ்தலையாற்றில் (Kosasthalai river) நேற்று முன்தினம் மாலை அப்பகுதி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்போது ஆற்று மணலில் முருகன் கற்சிலை இருப்பதைப் பார்த்துள்ளனர். அதனைப் பற்றி உள்ளூர்வாசிகளிடம் கூறியுள்ளனர். Russia President Election: ரஷ்யாவில் அதிபர் தேர்தல்.. இன்று முதல் மூன்று நாட்களுக்கு வாக்குப்பதிவு..!

அதனையடுத்து திருத்தணி தாசில்தார் மதியழகன் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று காலை அங்கு சென்றுள்ளனர். அங்கு ஆற்று மணலுக்குள், 3.5 அடி உயரம், 150 கிலோ எடையிலான முருகன் (Murugan) கற்சிலையை கண்டெடுத்தனர். சிலையில், தலையில் மகுடமும், நான்கு கைகளும், இரண்டு கால்களும் உள்ளன. சிலை அமைப்பு கி.பி.,12ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என, தொல்லியல் துறையினர் கூறுகின்றனர். மேலும் சிலையை மீட்ட திருத்தணி தாசில்தார் மதியழகன், அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார்.