அக்டோபர் 18, சென்னை (Festival News): இந்தியா முழுவதும் அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி சிறப்பிக்கப்பட இருக்கிறது. ஒளி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படும் இப்பண்டிகை இருளை அகற்றி தீமையை வெல்வதை உணர்த்துகிறது. தீபாவளி பண்டிகையை தீபஒளி திருநாள் (Deepavali) என்றும் அழைப்பர். தீபாவளி நாளில் ஏழை, பணக்காரர் என வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வீட்டை அலங்கரித்து, தீபமேற்றி, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமாகும். இந்நன்னாளில் எண்ணெய் தேய்த்து நீராடி தங்கள் மனதில் இருக்கும் இருளை நீக்க வேண்டும். வெள்ளி, சனிக்கிழமை முதல் தீபாவளி (Deepawali 2025) கொண்டாட்டங்கள் களைகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து பணியாற்றி வரும் பலரும், தீபஒளி (Diwali) பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் வருகின்றனர். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுகளை ஏற்படுத்தாத பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட நேரங்களில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நாளை உங்களின் நண்பர்கள், குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்து செய்திகளை வெளியிடுகிறது. Diwali 2025: தீபாவளி 2025 எப்போது? நல்ல நேரம், வழிபாடு முறை.. செல்வம் பெருகும் லட்சுமி-குபேர பூஜைக்கு சிறந்த நேரம்.!
1) 2025 தீபாவளி உங்கள் குடும்பத்திற்கு மறக்க முடியாத இனிய தருணங்களை கொண்டுவரட்டும்!

2) தீபங்களின் ஒளியால் வாழ்க்கையின் இருள் நீங்கி நம்பிக்கை என்ற ஒளி பிரகாசிக்கட்டும்! இனிய தீப ஒளி வாழ்த்துகள்!

3) அன்பும், சிரிப்பும் எப்போதும் உங்கள் இல்லத்தை சூழட்டும்! தீபாவளி வாழ்த்துக்கள்!

4) தீபங்கள் ஜொலிக்க, குடும்ப உறவுகளும் ஒளிரட்டும்! உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை லேட்டஸ்ட்லி தமிழ் தெரிவிக்கிறது.