Woman Abuses Cab Driver: 7 நிமிட தாமதத்தால் ஆத்திரம்; டாக்சி ஓட்டுனரின் மீது எச்சில் உமிழ்ந்த பெண்.. பரபரப்பு சம்பவம்.!
டாக்சி ஓட்டுனரின் மீது பெண் ஒருவர் எச்சில் துப்பி அவமதித்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜனவரி 15, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் டாக்சி சேவை தினம்தோறும் பல்லாயிரக்கணக்கானோரின் நேரத்தை மிச்சப்படுத்தி, நகரங்களுக்கு இடையேயான பயணங்களை எளிதாக்குகிறது. ஓலா, ஊபர், பாஸ்ட் ட்ராக் என பல நிறுவனங்கள் சார்பில், டாக்சி சேவைகள் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வப்போது சில சர்ச்சைக்குரிய விஷயங்களிலும் டாக்சி நிறுவனங்கள் சிக்கிக்கொள்கின்றன. குறிப்பாக கட்டணம், பெங்களூரில் மொழிப்பிரச்சனை என ஒவ்வொரு இடத்திலும் புதிய விஷயங்கள் சர்ச்சையை தருகிறது. இதனிடையே, டாக்சியில் பயணம் செய்த பெண்மணி, டாக்சி ஓட்டுனரிடம் தரக்குறைவாக பேசி கடிந்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த நிகழ்வு எங்கு நடந்தது? என்ற விபரம் இல்லை. ஆனால், இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. டாக்சியில் பயணம் செய்த பெண்மணி, உங்களின் இலக்குக்கு எதற்காக தாமதமாக வந்தீர்கள்? என வாக்குவாதத்தை தொடங்கி, ஓட்டுனரை தரக்குறைவாக பேசுகிறார். மேலும், இறுதியில் ஓட்டுனரின் மீது அவர் காரியும் உமிழ்கிறார்.
7 நிமிட தாமதத்திற்கு வாழ்நாளில் மறக்க முடியாத செயல்:
இத்தனையையும் பொறுமையுடன் எதிர்கொண்ட டாக்சி ஓட்டுநர், எங்கும் தனது நிலையை தளரவிடாமல் அமைதியாக பதில் கூறி இருக்கிறார். இதுதொடர்பான விவாதத்தின் வீடியோ வெளியாகி பேசுபொருளையுள்ளது. மேலும், பெண்ணின் செயலுக்கு கண்டனம் குவிந்து வருகிறது. டாக்சி சேவையை பொறுத்தமட்டில், நாம் அந்தந்த நிறுவனத்தின் செயலியில் புக்கிங் செய்யும்போது, அங்கு ஓட்டுனர்கள் தங்களின் காரில் வருகை தருவார்கள். நமது செயலியில் 5 முதல் 10 நிமிடம் என காட்டினால், அவர்கள் வர கூடுதலாக 5 நிமிடம் ஆகலாம். ஏனெனில் வரும் வழியில் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சனை உட்பட பல விஷயங்கள் அதற்கு காரணமாக அமைகிறது. இதனிடையே, பிக்கப் பாயிண்டுக்கு 7 நிமிடம் தாமதமாக வந்ததாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
டாக்சி ஓட்டுனரிடம் பெண் அநாகரீகமாக பேசும் காணொளி:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)