Minor Girl Behaves Like A Snake: குகையில் பாம்பு போல் நடந்துகொண்ட சிறுமி.. வீடியோ வைரல்..!

ஜார்க்கண்ட்டில் உள்ள ராணிதி குப்தா தாம் குகையில் சிறுமி ஒருவர், பாம்பு போல் நடந்துகொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Girl Behaved Like a Snake (Photo Credit: @ABPNews X)

ஜூலை 31, ஜார்கண்ட் (Jharkhand News): ஜார்க்கண்ட் மாநிலம், கோன் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணிதி குப்தா தாம் குகையில் (Ranidih Gupta Dham Cave), அம்மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியின் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ராணிதி குப்தா தாம் குகையில் பொதுமக்கள் அனைவரும் சாமி வழிபாட்டு தரிசனத்திற்காக வந்து செல்வர். அப்போது, அந்த குகையில் சிறுமி ஒருவர், தரையில் பாம்பு போல் ஊர்ந்து நாக்கை நீட்டி கொண்டிருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அதனை வீடியோ எடுத்தனர். Preeti Sudan Appointed As UPSC Chairman: UPSC தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்; இந்திய ஜனாதிபதி ஒப்புதல்..!

சிறுமியின் இந்த அதிர்ச்சி வீடியோ அப்பகுதி முழுவதும் பரவியது.

இதனையடுத்து, இந்த வீடியோ குறித்த செய்தியை சிறுமியின் குடும்பத்தினர் பார்த்துள்ளனர். அப்போது, அவர்கள் கூறுகையில் கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்து அவர் காணவில்லை. பல இடங்களில் தொடர்ந்து தேடி வந்த போதிலும் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், அந்த இடத்திற்கு சென்று, சிறுமியை முதலில் வணங்கி, இசைக்கருவிகளுடன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.