Devotees Drink AC Water: "சத்யசோதனை டா.. சாமி.." சாமி தீர்த்தம் என நினைத்து ஏசி தண்ணீரை வரிசையில் குடித்த பக்தர்கள்..!
உத்தர பிரதேசத்தில் கோயில் ஒன்றில் தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை பக்தர்கள் குடித்த வீடியோவானது வெளியாகி வைரலாகி வருகிறது.
நவம்பர் 04, மதுரா (Uttar Pradesh News): உத்தரப்பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பெயர் பாங்கே பிகாரி என்பதாகும். இந்த கோவிலை பார்க்க ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருவது வழக்கம். இந்த கோவில் சுவரில் யானை துதிக்கை வடிவில் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்பிலிருந்து தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்தது. இந்த நீரானது கிருஷ்ணரின் காலில் இருந்து வரும் தீர்த்தம் என்று பக்தர்கள் நம்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. WhatsApp Group For Hindu IAS Officers: இந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான வாட்ஸ்அப் குழு.. வெடித்த சர்ச்சை.!
வீடியோவில் சிலர் கைகளில் பிடித்து குடிப்பதும், சிலர் பிளாஸ்டிக் கோப்பை போன்ற பொருளில் நிரப்பி குடிப்பதும், எதுவும் இல்லாதவர்கள் உள்ளங்கையில் நீரைப் பிடித்துக் குடிப்பதும் பதிவாகியிருக்கிறது. உண்மையில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த ஏசி மெஷினில் இருந்து தண்ணீர் வெளியேறும் குழாய் அந்த யானை துதிக்கை கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஒரு யூடியூபர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவர்களிடம் சென்று, "இது சாமியின் பாதத்தில் இருந்து வரும் புனித நீர் கிடையாது.. ஏசியில் இருந்து வரும் தண்ணீர் என்கிறார். அதை கண்டுகொள்ளாத சில மக்கள் அந்த தண்ணீரை குடித்துக் கொண்டும் தலையில் தெளித்துக் கொண்டும் சென்றனர்.
சாமி தீர்த்தம் என நினைத்து ஏசி தண்ணீரை வரிசையில் குடித்த பக்தர்கள்: