Amul Cheese Advertisment: அமுல் பெயரில் சீஸ் விற்பனை அறிமுகம்?.. வைரலாகும் விளம்பரத்திற்கு மறுப்பு தெரிவித்த அமுல் நிறுவனம்.!
அதனை கட்டுப்படுத்த அரசு தனது முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும்.
டிசம்பர் 21, புதுடெல்லி (New Delhi): இந்திய அளவில் மிகப்பெரிய பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக இருப்பது அமுல் (Amul). இந்நிறுவனம் 2022-23ம் நிதியாண்டில் மட்டும் 72 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது.
சீஸ் விளம்பரங்கள்: இந்நிலையில், அமுல் நிறுவனத்தின் சார்பில் சீஸ் ஒன்று தயாரிக்கப்பட்டு புதிதாக விற்பனைக்கு வெளியிடப்படுவதாக விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இதனைக்கண்ட அமுல் நிர்வாகம், சீஸ் விற்பனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. X- Twitter Down: சர்வதேச அளவில் முடங்கியது எக்ஸ் (ட்விட்டர்): பயனர்கள் அவதி.!
அமுல் விளக்கம்: மேலும், தாங்கள் இது சார்ந்த எவ்விதமான விளம்பரமும் பதிவு செய்யவில்லை. நமது நிறுவனத்தின் சார்பாக மேற்கூறிய சீஸ் உற்பத்தி செய்யப்படவும் இல்லை. ஆகையால், இந்த விளம்பரத்தை நம்ப வேண்டாம்.
எடிட் செய்யப்பட்ட போலி பதிவு வைரல்: இது ஏஐ தொழில்நுட்பத்தை உபயோகம் செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமுல் நிர்வாகமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த தகவலை பகிர வேண்டுகோள் வைக்கிறோம் என்று அமுல் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.