
மார்ச் 03, சென்னை (Chennai News): வாழைப்பழம் நெல், கோதுமை, மற்றும் சோளத்திற்குப் பிறகு நான்காவதாக அதிகளவு அறுவடை செய்யப்படும் விவசாயப் பயிராக உள்ளது. மேலும் வாழைப்பழம் சீசன்கள் மட்டுமின்றி அனைத்து காலங்களிலும் கிடைக்கும். இதனால் விவசாயிகள் குறைந்த விலையில் வாழைத்தார்களை விற்றால் லாபம் கிடைக்காது. வாழையில் அடி முதல் நுனி வரை உடலுக்கு சத்துக்களும் மற்றும் நன்மை தரக் கூடிய பொருட்கள் கிடைக்கிறது. வாழை விவசாயிகள் முறையாக மதிப்புக் கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்தால் அதிக லாபம் பெற முடியும். மற்ற மதிப்புக் கூட்டிப் பொருட்களை விட வாழை மரத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் பல விதமான பொருட்களை தயாரிக்க முடியும்.
வாழைப்பொடி:
வாழையில் உள்ல பொட்டாசியம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை தரும் உணவாக உள்ளது. இது நரம்பு மற்றும் தசைகளை மேம்படுத்தவும் உதவும். பச்சை வாழைப்பழத்தில் உள்ள எதிர்ப்பு சக்தி எளிதில் செரிமானமாக்கும். வாழைக்காயை துண்டுகளாக நறுக்கி, நிழலில் காய வைத்து பொடியாக அரைத்து மாவாக பேக் செய்து விற்பனை செய்யலாம். தற்போது இதை அதிகளவில் மக்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு ஏற்ற உணவாக உள்ளது. அழகு குறிப்புகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாழைப்பொடியின் விலை கிலோ 150-300 வரை விற்கப்படுகிறது. இது போலவே வாழைத்தண்டையும் பொடி செய்து விற்பனை செய்யலாம். First Night Tips: தாம்பத்ய வாழ்க்கை இனிக்க.. மெல்ல மெல்ல தொடுங்கள்...!
உலர் வாழைப்பழம்:
வாழைப்பழங்கள் மூன்று நாட்கள் வரை மட்டுமே ஃப்ரெஷாக இருக்கும். அதன் பின் பழங்கள் அதிகமாக விற்காமல் கெட்டுவிடும் பட்சத்தில் உலர் வாழைப்பழத்தை தயாரிக்கலாம். இது இந்தியாவில் அதிக தேவை இல்லையெனினும் இதில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புள்ளது. உள்ளூரில் குறைந்த அளவில் விற்பனை மேற்கொள்ளலாம். இது உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும், உடலை கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்களுக்கும் இந்த உலர் வாழைப்பழங்கள் தேவை இருப்பதால் ஜிம்களில், சூப்பர் மார்கெட்டுகளில் விற்கலாம். இது கிலோ 300- 400 வரை விற்காலம்.
வாழைநார் பொருட்கள்:
வாழை மட்டையை தண்ணீரில் ஊறவைத்து வாழை நார்கள் தயாரிக்கப்படுகிறது. வாழை நாரில் பல சிறு தொழில் நிறுவனக்கள் பொம்மைகள், பைகள், பெண்கள் பயன்படுத்தும் நாப்கிங்கள் தாயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம். மேலும் இதில் பல கைவினைப்பொருட்களும் தயரிக்கப்படுகிறது.
வாழைத்தோல் உரப் பொடி:
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த வாழைத்தோலை பொடி செய்து விநியோகம் செய்யலாம். வாழைத்தோலில் அதிக பொட்டசியம், பாஸ்பரஸ், சிங், காப்பர், மாங்கனீச், சோடியம் போன்ற பல சத்துக்கள் இருப்பதால் செடிகளுக்கு நல்ல உரமாக இருக்கும். வாழைப்பழைட்த்ஹோலை வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து விற்பனை செய்யலாம். இது நல்ல இயற்கை உரமாக செயல்படும். இதை பாக்கெட்டில் போட்டு கிலோ 250 முதல் 300 வரை விற்க முடியும்.