டிசம்பர் 21, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவில் 353.90 மில்லியன் பயனர்களைக் கொண்ட எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனம், மக்களால் தினமும் தகவல்களை பரிமாற உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு இந்தியாவில் மட்டும் எக்ஸ் பக்கத்தை 24.45 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். Trending வீடியோ: ஓடும் இரயில் ஏற முயற்சி: தவறி விழுந்த இளம்பெண்ணை நொடியில் காப்பாற்றிய பெண் இரயில்வே காவல்துறை அதிகாரி.!
முடங்கியது எக்ஸ் தளம்: அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறுகளை இன்றளவில் சமூக வலைத்தளங்கள் சந்திப்பது அரிதாகிவிட்டது. இந்நிலையில், தற்போது ட்விட்டர் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனையை சந்தித்து முடங்கி இருக்கிறது. இதனை மீட்டெடுக்கும் பணியில் எக்ஸ் தொழில்நுட்பக் குழு ஈடுபட்டு வருகிறது.
பயனர்கள் அவதி: மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய முடக்கத்தின் காரணமாக, பயனர்கள் தங்களின் சமூக பக்கத்தை உபயோகம் செய்ய இயலாமல் தடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அவர்களால் எந்த பதிவையும் பார்க்க முடியவில்லை.
இன்ஸ்டா பக்கம் திரும்பிய பயனர்கள்: எக்ஸ் பக்கம் முடங்கியதைத்தொடர்ந்து பலரும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
View this post on Instagram