Minister Slaps: "எனக்கு முன்னாடி எங்க போற?" - முந்திச்சென்ற தொண்டரின் காலரை பிடித்து இழுத்து பளார் விட்ட அமைச்சர்..!

அமைச்சர்கள் பொதுஇடத்தில் ஒருசில நேரம் தங்களின் நிலையை அறியாமல் ஆவேசப்பட்டு சர்ச்சையில் சிக்குவது அனைத்து இடங்களிலும் தொடர்கதையாக நடக்கிறது.

தொண்டரை அமைச்சர் தாக்கிய காட்சிகள் (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 20, ஹைதராபாத் (Social Viral): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஆர்.டி.சி க்ராஸ் சாலை பகுதியில் இருக்கும் இரும்பு பாலத்தின் திறப்பு விழா நேற்று (ஆக. 19., சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த திறப்பு விழாவின்போது அம்மாநில விலங்குகள் நலத்துறை அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் (Talasani Srinivas), தகவல் & தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ், பாரதிய ராஷ்ட்ரிய ஷமேதா கட்சியின் (Bharat Rashtra Samithi) மூத்த தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ், தனக்கு முன்னாள் சென்ற தொண்டரின் சட்டை காலரை பிடித்து இழுத்து கன்னத்தில் பளாரென அறை விட்டார். தன்னை எப்படி முந்திச்செல்வாய் என வாக்குவாதம் செய்து பளார் அறை விட்டதால், அப்பகுதியில் லேசான பரபரப்பு தொற்றிக்கொண்டது. WWE Superstar Spectacle: ஒரேநாளில் விற்றுத்தீர்ந்த WWE போட்டிக்கான டிக்கெட்டுகள்; கொண்டாட்டத்தில் இந்திய ரசிகர்கள்.. ஹைத்ராபாத்தில் சந்திப்போம்..!

இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவாகவே, இதனைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அம்மாநில பாஜக இதனை கையில் எடுத்து பேசுபொருளாகவும் மாற்றி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்தவர்கள் புதிய முயற்சிகளை செய்து சர்ச்சையில் சிக்குவார்கள்.

திமுக ஆட்சியில் இயல்பாக பேசுவதாகவும், தொண்டர்களை திட்டுவதாகவும் நினைத்து சர்ச்சையில் சிக்கினார்கள். இந்த சர்ச்சை செயல்களை செய்ய மாநிலம் தோறும் அமைச்சர்களாக இருப்பவர்களில் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது தான் வியப்பின் உச்சமாக இருக்கிறது.