Chennai Shocker: பூனையை பிடிக்க ஆசைப்பட்டு, கடப்பா கல் விழுந்து 5 வயது சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே கவனம்.!

சிறுவர்கள் உள்ள வீட்டில் நொடிக்கு நொடி அவர்களின் செயல்பாடுகளை கண்ணும் கருத்துமாக கவனிக்காத பட்சத்தில், விபரீதம் ஏற்படலாம் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.

Victim Kavin | Death File Pic (Photo Credit: Facebook / Pixabay)

பிப்ரவரி 23, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவன் கவின் (வயது 5). சிறுவன் வீட்டில் ஆசையாக பூனைக்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கவின் பூனையுடன் விளையாடி இருக்கிறார். அச்சமயம் வீட்டின் பக்கவாட்டு சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்த கடப்பா கல் அடியில் புகுந்த பூனை, மற்றொரு புறத்தின் வழியே வெளியேறி இருக்கிறது. பூனையை பிடிக்கும் ஆவலுடன் சிறுவன் கவின் கடப்பா கல்லுக்குள் புகுந்து இருக்கிறார். Love Cheating Ends Jail: 23 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக சீரழித்து சித்ரவதை; இன்ஸ்டா காதலனை கம்பி என்ன வைத்த இளம்பெண்.! 

மகிழ்ச்சியான தருணம் நொடியில் உயிர்பறித்த சோகம்: இறுதி பகுதிக்கு வரும்போது சிறுவன் எழுந்து நிற்க முயற்சித்ததாக தெரியவரும் நிலையில், சாய்த்து வைக்கப்பட்டு இருந்த கல் உடைந்து சிறுவனின் கழுத்து மீது விழுந்துள்ளது. இதனால் சிறுவன் தப்பிச்செல்லவோ அலறவோ வழியின்றி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிர் பிரிந்துள்ளது. சில மணித்துளிகள் கழித்தே சிறுவனை குடும்பத்தினர் கண்டு இருக்கின்றனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுவனின் மரணமும் உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement