Cyclone Michaung: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நகரத்தொடங்கியது மிக்சாங் புயல்: கடலோர மாவட்டங்கள், சென்னைக்கு உச்சகட்ட அலெர்ட்.!

நடப்பு ஆண்டின் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது.

Cyclone Michaung (Photo Credit: @chennaiweather)

டிசம்பர் 03, சென்னை (Chennai): தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று இருக்கிறது. இதற்கு மியான்மர் பரிந்துரை செய்த மிக்சாங் (Michaung Cyclone) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் சென்னையில் இருந்து 310 கி.மீ தூரத்தில் வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கிறது.

கரையை கடக்கும் பகுதி: இன்று காலை 05:30 மணியளவில் புயல் வலுப்பெற்று தொடர்ந்து 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இப்புயல் வரும் 5ம் தேதி ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் - மசினப்பட்டினம் இடையே, பகல் வேளையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

கனமழை அறிவிப்பு: புயல் நாளை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடகடலோர தமிழக மாவட்டங்கள், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம்: கரையை கடக்கும்போது புயலின் வேகம் 100 கி.மீ வேகம் வரை வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் சென்னையில் தரைக்காற்று 70 கி.மீ வேகம் வரை வீசத்தொடங்கி, நாளை 90 கி.மீ வரை வீசலாம் என எதிர்பார்க்கப்டுகிறது. IND Vs AUS T20I: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் இறுதி ஆட்டம்: ஆவலுடன் எதிர்பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள்.! 

தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழை: இப்புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும், சில இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடதமிழகத்தில் அதிக மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காணிப்பில் புயல்: புயலின் காற்றின்போக்கு நகரும் திசையை உறுதி செய்யும் என்பதால், தற்போதைக்கு புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரா சென்றுள்ளது. புயலின் நிலை தொடர்ந்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள சென்னை, எண்ணூர், கடலூர் உட்பட 5 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.