Tamilnadu on December Month: டிசம்பர் மாதமும், தமிழ்நாட்டின் போதாத காலமும்... மக்களை கலங்கவைக்கும் மாதம்., காரணம் என்ன?..!

ஆனால், அம்மாதத்தில் நடந்த நிகழ்வுகள் மக்களின் மனதில் அப்படியான தாக்கத்தை தோற்றுவித்துவிட்டது.

Template: Dec Month Tamilnadu State Map

டிசம்பர், 8: தமிழ்நாட்டிற்கும் - டிசம்பர் மாதத்திற்கும் (December Month) போதாத காலம் என்று கூறினால் அது ஒருசேர பொருந்தாது. ஆனால், அம்மாதத்தில் நடந்த நிகழ்வுகள் மக்களின் மனதில் அப்படியான தாக்கத்தை தோற்றுவித்துவிட்டது. வடகிழக்கு பருமழையின் உச்சத்தால் மழை, வெள்ளம் ஒருபுறம், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்பட்ட சுனாமி மறுபுறம் என இருந்தால், தமிழக மக்களால் கடவுளுக்கு இணையாக பார்க்கப்பட்ட பல அரசியல் பெருந்தலைவர்கள் மறைந்ததும் இம்மாதத்தில் தான். அது குறித்த தகவலை இன்று காணலாம்.

ஜெயலலிதாவின் மரணம் (Jayalalithaa's Death): தமிழ்நாடு மக்களால் புரட்சித்தலைவி, அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்பலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று டிசம்பர் 5, 2016ல் இவ்வுலகை விட்டு மறைந்தார். இவர் தனது வாழ்நாட்களில் 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றி இருக்கிறார். இருப்புப்பெண், சிங்கப்பெண் என்று போற்றப்பட்ட ஜெயலலிதாவின் மரணம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Tamilnadu Former Chief Minister J.Jayalalitha

எம்.ஜி.ஆரின் மரணம் (M.G.Ramachandran Death): தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அரசியலில் மக்களின் மனதை வென்ற முதல்வர், புரட்சித்தலைவர், இதயக்கனி என்று பல படங்களுக்கு சொந்தக்காரர் எம்.ஜி.இராமச்சந்திரன். இவர் 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளார். அவரின் மீது தமிழக மக்கள் வைத்திருந்த பாசம், அவரின் மரணச்செய்தி அறிந்த பலரும் தங்களின் வீடுகளில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டார்கள். அவரின் இறுதிச்சடங்கில் 29 பேர் பலியாகினர்.

அவரின் மரணத்தை ஏற்றுக்கொள்ளாத அன்றைய தலைமுறை, இன்னும் அவர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் என்றே கூறிவருகிறது. அவர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும், பலரின் மாநாடுகளில் இன்னும் வாழத்தான் செய்கிறார் என்பதே நிதர்சனம். Loss of Hearing: உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் தென்படுகிறதா?.. காது கேளாமைக்கான அறிகுறியாக இருக்கலாம் உஷார்..! 

ஈ.வெ. இராமசாமி @ பெரியார் மரணம் (E.V Ramasamy Periyar's Death): சமூக சீர்திருத்தவாதி, போராளி, மூடநம்பிக்கை எதிர்ப்பாளர் என பல போற்றுதலுக்கு சொந்தக்காரராக, அவரின் கொள்கையை ஏற்றவர்களால் பெரியார் என்று போற்றப்பட்டவர் ஈ.வெ இராமசாமி. இவரை யுனெஸ்கோ அமைப்பு தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தவாதி என்று போற்றி கூறியுள்ளது. இவர் கடந்த 1973 டிசம்பர் 24ல் மறைந்தார். அவர் இவ்வுலகை விட்டு மறைத்தாலும், அவரின் கொள்கையை பலரும் கடைபிடித்து வருகின்றனர்.

2004 சுனாமி (2004 Tsunami): இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த 26 டிசம்பர் 2004ல் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தியது. அப்போது வரை சுனாமி குறித்த தகவலை அறிந்தாலும், அது நமக்கு வர வாய்ப்பில்லை என்று எண்ணிய இந்தியர்களுக்கு நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை தந்தது.

Mega Tsunami

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி இந்தியா உட்பட 14 நாடுகளை பதம்பார்த்து. அதில், 2.5 இலட்சம் மக்கள் உயிரிழந்தனர்.இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தமிழ்நாட்டில் சுனாமி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி, சுமார் 8 ஆயிரம் தமிழர்களை காவுவாங்கியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர். தமிழக வரலாற்றில் மறக்க முடியாத சோகம் இது ஆகும்.

புயல்கள் (Cyclones & Storms): தமிழ்நாட்டில் நவம்பர்-டிசம்பர்-ஜனவரி முன்பின் உள்ள பருவங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் என்பதால், அவ்வப்போது வங்கக்கடலில் இருந்து புயல்களும் கிளம்பி வரும். அவை கடந்து செல்லும் பாதையை பொறுத்து அதன் வழியில் உள்ள மாவட்டங்களை பதம்பார்த்து செல்லும். கடந்த 2005ல் பனூஸ் புயல், 2011ல் தானே புயல், 2016 வர்தா, கஜா புயல் உட்பட பல்வேறு பாதிப்புகள் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ளன.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 04:16 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).