Delhi Shocker: கற்பழிப்பு புகாரை வாபஸ் பெற மறுத்ததால் ஆத்திரம்: 17 வயது சிறுமி மீது ஆசிட் தாக்குதல்., குற்றவாளி ஆசிட் குடித்து பலி.!
தன் மீதான கற்பழிப்பு புகாரை பெண்மணி வாபஸ் பெற ஆத்திரத்தில், அவரின் 17 வயது மகள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி தானும் தற்கொலை செய்த கயவனின் கொடூர எண்ணம் பதைபதைக்க வைத்துள்ளது.
டிசம்பர் 08, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதிலும், பாலியல் ரீதியாக பெண்களை துன்பப்படுத்தி, அவ்வழக்கை திரும்பபெறச்சொல்லி மிரட்டும் கொடுமையும் பல்வேறு இடங்களில் திரைமறைவில் நடைபெற்றுகின்றன. இவ்வாறான செயல்களை தடுக்க, பலாத்கார புகார்களுக்கு விரைந்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பளிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மகளுடன் வசித்துவந்த பெண் பலாத்காரம்: புதுடெல்லியில் உள்ள ப்ரெசிடெண்ட் எஸ்ட்டேட் பகுதியில் வசித்து வருபவர் பிரேம் சிங் (வயது 54). இவரின் பக்கத்து வீட்டில் பெண்மணி தனது 17 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேம் சிங், தனது பக்கத்து வீட்டு பெண்ணை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜாமினில் வெளியே வந்த குற்றவாளி: புகாரை ஏற்ற காவல் துறையினர், பிரேம் சிங் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் இருந்த நிலையில், அவரது வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சி ஒன்றுக்காக நீதிமன்றத்தில் முறையிட்டு ஜாமின் பெற்று வெளியே வந்துள்ளார். Fighter Teaser Out Now: ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பைட்டர் திரைப்படத்தின் டீசர் காட்சிகள் வெளியீடு..!
வழக்கை வாபஸ் பெற மிரட்டல்: கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய பிரேம் சிங், ஜாமினில் வெளியே வந்ததும் தன் மீதான வழக்கை வாபஸ் பெறக்கூறி பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று பெண்ணின் வீட்டிற்கு சென்ற பிரேம் சிங், அவரின் மகளை வைத்து வழக்கை வாபஸ் பெரும் முயற்சியில் மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
கொலை முயற்சி அரங்கேற்றம்: பெண்மணி தனது முடிவில் உறுதியாக இருக்கவே, தான் திட்டமிட்டு மறைத்து எடுத்துச்சென்ற ஆசிட்டை எடுத்து பெண்ணின் 17 வயது மகள் மீது வீசிவிட்டு, தானும் அதனை குடித்து இருக்கிறார். பதறிப்போன பெண்மணி அலறவே, அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
குற்றவாளி உயிரிழப்பு: இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த டெல்லி மத்திய காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் ஜெயினும், நேரடியாக மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, குற்றவாளியும் ஆசிட் குடித்து உறுதி செய்யப்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது, அவரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது.
தப்பித்த சிறுமி: நல்வாய்ப்பாக சிறுமி பெரிய அளவிலான காயங்கள் இன்றி தப்பியதால், சிகிச்சைக்கு பின்னர் பத்திரமாக வீடு திரும்புவார் என மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணிடம் அத்துமீறிவிட்டு, அந்த புகாரை வாபஸ் பெறச்சொல்லி மிரட்டி கயவன் நடத்திய கொடூரம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.