Sundara Mahalingam Temple: சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர 4 நாட்களுக்கு அனுமதி; பக்தர்கள் மகிழ்ச்சி.!
ஆடி பௌர்ணமி, பிரதோஷம் போன்றவற்றை முன்னிட்டு சதுரகிரி மலைகளின் மீது அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜூலை 17, ஸ்ரீவில்லிபுத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, தாணிப்பாறை பகுதியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவில், புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் சதுரகிரி மலைகள் (Sathuragiri Hills) அமைந்துள்ள காரணத்தால், கோவில் முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி, பண்டிகை நாட்களில் வனத்துறை பொதுமக்களுக்கு மலைமீதுள்ள கோவிலுக்கு சென்று வர அனுமதி வழங்கும். Courtallam Falls Flood: குற்றாலம் அருவிகளில் தொடரும் தடை; ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப்பயணிகள்.. தொடர் வெள்ளப்பெருக்கால் கெடுபிடி.!
4 நாட்களுக்கு மகாலிங்கம் சென்றுவர அனுமதி:
தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், சிவபக்தர்கள் பலரும் சுந்தர மகாலிங்கம் சென்றும் வர ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், வனத்துறை சார்பில் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர பக்தர்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. பக்தர்கள் ஜூலை 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை 4 நாட்களுக்கு சுந்தர மகாலிங்கம் சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடி பிரதோஷம் மற்றும் பௌர்ணமி ஆகியவற்றை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக 4 நாட்கள் மலை மீதுள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீர் மழை பெய்யும் பட்சத்தில், அதிகாரிகள் சார்பில் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.