Courtallam Falls (Photo Credit: @thinak_ X)

ஜூலை 17, குற்றாலம் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் (Courtallam Waterfalls), மேற்குத்தொடர்ச்சி மலையின் மீது அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள பகுதி ஆகும். இதனால் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி போன்றவற்றில் சீசன் நேரங்களில் நல்ல நீர்வரத்து என்பது இருக்கும். அருவி நீரில் சுற்றுலாப்பயணிகள் பலரும் நீராடி மகிழ்ந்து செல்வார்கள்.

குற்றாலம் (Kutralam Falls) அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு:

சமீபகாலமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து என்பது அதிகரித்து இருக்கிறது. தென்மேற்குப்பருவமழை கேரளாவில் தொடங்கி இந்தியா முழுவதும் உச்சம்பெற்றுள்ள நிலையில், பல்வேறு இந்திய மாநிலங்கள் நல்ல மழையை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பரவலாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களாக தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள், குற்றாலம் மலைமீதுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளில் நல்ல மழை பெய்தது. Sardar 2 Shooting Spot Accident: நடிகர் கார்த்திக்கின் சர்தார் 2 படப்பிடிப்பு தலத்தில் சோகம்; சண்டைப்பயிற்சிக்கலைஞர் பலி.! 

சுற்றுப்பயணிகள் ஏமாற்றம்:

இதனால் குற்றாலத்தில் இருக்கும் மெயின் அருவி, பழைய அருவி, சிற்றருவி ஆகியவற்றில் நீர் வரத்து என்பது அதிகம் காணப்பட்டது. மக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கடந்த 4 நாட்களாக மேற்கூறிய அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தொலைதூரத்தில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் பலரும் ஏமாற்றத்துடன் அருவியை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்தவாறு கடந்து சென்றனர்.

நான்காவது நாளாக தொடரும் தடை:

கடந்த 3 நாட்களாக அறிவிக்கப்பட்டு இருந்த நீராடும் தடை இன்றாவது நீக்கப்படும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து வெள்ளம் குற்றால அருவிகளில் ஓடுவதால், நான்காவது நாளான இன்றும் மக்கள் அருவிகளில் நீராட தடை விதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றாலம் பழைய அருவியில் குளிக்கச்சென்ற திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிறுவன் அஜித் (17), திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.