Erode Shocker: உறவினர் என நம்பியதற்கு 15 வயது சிறுமியை சீரழித்த கொடுமை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!

நமது சொந்தமே என நம்பி வீட்டில் ஒருவராய் இளைஞரை தங்கவைக்க, அவர் உறவினர் மகளை சீரழித்த கொடுமை கோபிசெட்டிபாளையம் அருகே நடந்துள்ளது.

Accuse Arun Kumar | Sexual Abuse File Pic (Photo Credit: Facebook / Pixabay)

பிப்ரவரி 29, சிறுமுகை (Erode Crime News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறுமுகை பகுதியில் 15 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் உறவுக்கார இளைஞரான அருண் குமார் என்பவர், சிறுமியின் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். உறவுக்கார இளைஞர் என்பதால், அவர் குடும்பத்தில் ஒருவர் போல் இருந்து வந்துள்ளார்.

பாசமாக இருப்பது போல நடிப்பு: வீட்டில் ஒன்றாக இருந்து வந்த அருண் குமார், 15 வயது சிறுமியிடம் ஆசையாக பேசி, அவருக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோரும் மகளின் மீது அருண் குமார் பாசமாக இருக்கிறார் என நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். Weight Loss Methods: உடல் எடையை கட்டுப்படுத்த.., வாய் ருசியை கட்டுப்படுத்த முடியலையா?.. இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! 

Sexual Harassment (Photo Credit: Pixabay)

சிறுமி பலாத்காரம்: இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அருண் குமார் அத்துமீறி இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் விபரத்தை தெரிவித்துள்ளார். உண்மையை அறிந்து அதிர்ந்துபோன பெற்றோர், கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போக்ஸோவில் கைது: புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், உண்மை அம்பலமாகவே அதிகாரிகள் அருண் குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமிகள் உள்ள வீட்டில் நம்பிக்கையின் பேரில் உறவினர்களை தங்கவைத்தால், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். எல்லைதாண்டி பெண் குழந்தைகளுடன் பழக அனுமதிக்க வேண்டாம் என்றும் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement