Fact Check: குரங்கு கடியால் குரங்குபோல அட்ராசிட்டி செய்த நபர்.. பரவி வரும் வதந்தி.. உண்மை என்ன?!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் குரங்கு கடியால் குரங்குபோல தாவிய நபர் என்று பரவும் தகவல் வதந்தி என உண்மை தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.

Monkey Attack (Photo Credit: @backiya28 X)

ஆகஸ்ட் 20, சிவகங்கை (Sivagangai News): சிவகங்கை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் குரங்கு கடித்தற்காக சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென நுழைவாய்க் கம்பியில் ஏறி குரங்கு போல் அமர்ந்து கொண்டு அங்கிருந்தவர்களை தாக்குவதும் கடிப்பதும் போன்ற செயலில் ஈடுபட்டதாக கூறி, ஒரு வீடியோ இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Lateral Entry Withdrawal: பணிகளில் நேரடி நியமன முறை ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு..!

இது முற்றிலும் பொய்யான தகவல், அவரை குரங்கு கடிக்கவில்லை. காணொளியில் இடம்பெற்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர்; சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டவர். அங்கு சிகிச்சையில் ஈடுபடாமல் அவர் செய்த அட்டூழியத்தின் வீடியோ தான் இணையம் முழுதும் இவ்வாறு பரவியது.