ஆகஸ்ட் 20, புதுடெல்லி (New Delhi): மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முறையை மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதே முறையை பின்பற்றி, மத்திய அரசு காலிப்பணியிடங்களான இணை செயலர், துறை இயக்குனர் என மொத்தம் 45 மத்திய அரசுத்துறை உயர்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது,
தமிழ்நாடு முதல்வர் ட்வீட்: இது குறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், “சமூக நீதியை நிலைநாட்டவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அதன் சரியான நடைமுறையை உறுதிப்படுத்தவும், பின்வரும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். தகுதிமிக்க பட்டியல் - பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும். மத்திய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நியாயமான, சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும். Doctor Rape And Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. தலைமை நீதிமன்ற அமர்வு விசாரணை..!
தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற ‘கிரீமிலேயர்’ முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கிரீமிலேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, வரலாற்று ரீதியாக உரிமை மறுக்கப்பட்ட நமது சமூகத்தின் அனைத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் நியாயமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்றியமையாதது” என்று குறிப்பிட்டிருந்தார்.
நேரடி பணிநியமனங்கள் ரத்து: இந்த நிலையில் மத்திய அரசுப்பணிகளில் நேரடி நியமன முறையை (Lateral Entry) ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சிக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் தற்போது நேரடி நியமன முறை ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Union Minister Jitendra Singh (@DrJitendraSingh) writes to Chairman UPSC on canceling the Lateral Entry advertisement as per directions of PM Modi. pic.twitter.com/Qqbw0S1v7d
— Press Trust of India (@PTI_News) August 20, 2024