Trending Video: கடும் வெப்பத்துடன் பெட்ரோல் டேங்கில் எரிபொருள் நிரப்புபவரா நீங்கள்?.. இந்த வீடியோ உங்களுக்குத்தான்.. கவனமாக இருங்கள்.!
நல்வாய்ப்பாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
ஜூன் 20, மும்பை (Trending Video News): மனிதனின் தேவைக்காக கண்டறியப்பட்ட இயந்திரங்கள், சில நேரங்களில் நம்மிடையே ஏற்படுத்தும் பிரச்சனை காரணமாக நமக்கு தீங்கு நேரலாம். அவை பெரும்பாலும் நமது அலட்சிய செயல்பாடுகள் காரணமாக ஏற்படுபவையாகவும் இருக்கும்.
நாம் அன்றாடம் உபயோகம் செய்யும் இருசக்கர வாகனத்தின் எரிபொருளாக பெட்ரோல் நிரப்பப்படுகிறது. இந்தியாவில் கோடைகாலத்தின்போது வெப்பம் அதிகளவு இருக்கும் என்பதால், நாம் வெயில் வேளைகளில் பயணம் செய்ய நேரிட்டால் வாகனம் விரைந்து சூடாகும்.
இவ்வாறான தருணத்தில் நமது எரிபொருள் ஒருவேளை தீர்ந்துவிடும் பட்சத்தில், வாகனத்தை பெட்ரோல் பங்க் அருகில் 5 நிமிடம் நிறுத்திவிட்டு பின் சூடு சிறிது குறைந்ததும் பெட்ரோல் நிரப்பலாம். ஆனால், அவசர கதி என அலட்சியத்துடன் செயல்பட்டால் பின்விளைவுகள் பதறவைக்கும் வகையில் இருக்கும்.
நமது உடமைக்கு நாமே பொறுப்பு என்பதை போல, நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் எரிபொருள் எளிதில் தீப்பற்ற வாய்ப்பு உள்ளவை ஆகும். -43 டிகிரி குளிர் நிலையிலும் பெட்ரோல் நன்கு எரியும் திரவ வகை எரிபொருள் ஆகும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் பெட்ரோல் நிரப்பும் போது திடீரென வாகனம் தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. விரைந்து செயல்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் கோடை காலத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டியதை வலியுறுத்தி வைரலாகி வருகிறது.