Just One Leave In 26 Years Of Work: யார் சாமி இவர்.. 26 வருட வேலையில் ஒரே ஒரு விடுப்பு.. குவியும் பாராட்டுக்கள்..!

உ.பி.யைச் சேர்ந்த தேஜ்பால், தனது 26 ஆண்டுகால வாழ்க்கையில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளார்.

Just One Leave In 26 Years Of Work: யார் சாமி இவர்.. 26 வருட வேலையில் ஒரே ஒரு விடுப்பு.. குவியும் பாராட்டுக்கள்..!
Tejpal Singh (Photo Credit: @backiya28 X)

மார்ச் 12, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh News): உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தேஜ்பால் (Tejpal Singh), 26 ஆண்டு பணியில் ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார். தனது பணியில் அதீத ஈடுபாடு கொண்டதால், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஹோலி, தீபாவளி போன்ற விசேஷ நாட்களிலும் கூட வேலை செய்கிறார்.

டிசம்பர் 26, 1995 இல், தேஜ்பால் சிங் துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றத் தொடங்கினார். வருடத்திற்கு 45 நாட்கள் விடுமுறை எடுக்கும் விருப்பம் இருந்தபோதிலும், அவர் தனது முழு வாழ்க்கையிலும் ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளார். ஜூன் 18, 2003 அன்று அவரது தம்பியின் திருமணம். அதற்காக தான் அந்த ஒரு நாள் விடுப்பு எடுத்துள்ளார். தேஜ்பாலுக்கு இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர். தேஜ்பால் ஒரு நாள் கூட வேலையில் இருந்து விடுப்பு எடுத்ததில்லை, அவர்க்கு நான்கு குழந்தைகள் (இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள்). Rishabh Pant Declared Fit By BCCI For IPL 2024: "நான் ரெடி தான் வரவா.." ரிஷப் களமிறங்க தயார் என பிசிசிஐ அறிவிப்பு..!

அவர் தனது தொழிலுக்கான அசாதாரண அர்ப்பணிப்பிற்காக "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்" (India Book Of Records) அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஒருவரின் வேலையில் கவனம் மற்றும் அர்ப்பணிப்பை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை தேஜ்பால் தனது பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement