மார்ச் 12, புதுடெல்லி (New Delhi): கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷப் பன்ட் (Rishabh Pant) பயங்கர கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பன்ட் தற்போது மெல்ல மெல்ல உடல் தகுதியை மீட்டு வருகிறார். பெங்களூருவில் உள்ள தேசிய அகடமியில் தற்போது 100% உடல் தகுதியை எட்டி இருக்கிறார். மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) (BCCI) பந்த் உடற்தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிகாரப்பூர்வமாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் (Delhi Capitals) சேருவதற்கான பச்சை விளக்கைப் பெற்றுள்ளார். Haryana CM Manohar Lal Khattar Resigns: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா.. அமைச்சரவை கலைப்பு..!
அதேசமயம் ரிஷப் பந்த் இம்முறை ஐபிஎல் தொடரில் வெறும் பேட்ஸ்மேனாக தான் விளையாடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை செய்து வந்தாலும் அவரை அவசரப்படுத்தி வேறு எந்த சிக்கலையும் உண்டாக்க வேண்டாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி (Impact Player) கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பண்டை வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டும் பயன்படுத்திவிட்டு பில்டிங்கில் அவருக்கு முழு ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.