Cuddalore Shocker: கடலூரை உலுக்கிய பயங்கர சம்பவம்; 3 பேரை எரித்துக்கொன்றது ஏன்?.. கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.!

விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகி இருக்கின்றன.

Kamaleswari, Nishanth, Suthan Kumar | Accuse Shankar Anand (Photo Credit: @ThanthiTV / @Minnambalamnews X)

ஜூலை 19, நெல்லிக்குப்பம் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் (Nellikuppam Murder), காராமணி பகுதியில் வசித்து வருபவர் காமலேஸ்வரி. இவரின் மகன் சுரேந்திர குமார். சுரேந்திர குமாரின் மகன் நிஷாந்த் (10). இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர்களின் வீட்டில் இருந்து புகை வரவே, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தனிப்படை அமைத்து விசாரணை:

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த மூவரும் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், உடல் பாதி எறிந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இந்த விஷயம் குறித்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. கொலை சம்பவம் குறித்து 7 தனிப்படையும் அமைக்கப்பட்டது. Special Bus Service in TN: வார இறுதி, ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு.!

குற்றவாளிகள் இரண்டு பேர் கைது:

இதற்கிடையில், வீடு முழுவதும் மட்டுமல்லாது பக்கத்து வீட்டின் சுவற்றிலும் இரத்த கரை இருந்த காரணத்தால், அவர்களிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் கிடைக்காததால், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஐடி ஊழியரான சுதன் குமார் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்த காரணத்தால், அங்கும் விசாரணைக்காக ஒரு தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கொலை விவகாரத்தில் இவர்களின் வீட்டருகே வசித்து வந்த சங்கர் ஆனந்த் என்ற இளைஞரும், அவரின் நண்பருமான சாகுல் அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் கொலையாளி சங்கர் ஆனந்த் (21) பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

தாயின் தற்கொலைக்கு பழிவாங்க எண்ணி பயங்கரம்:

அதாவது, சுதன் குமார் பெண்கள் விஷயத்தில் சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. அதே பகுதியில் கணவரை இழந்து தனது மகனுடன் சங்கரின் தாயார் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சங்கரின் தாய் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், தாயின் மரணத்திற்கு சுதன் குமார் காரணம் என சங்கர் ஆனந்த் கருதியுள்ளார். இதனால் சுதனை பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்து வந்துள்ளார். TN Weather Update: 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

இருவர் வெட்டிக்கொலை:

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக அமைதியாக இருந்த ஆனந்த், சம்பவத்தன்று சுதனின் 10 வயது மகனை விளையாட அழைத்துள்ளார். அச்சமயம் சுதனின் தாய் ஆனந்தை திட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரம் ஏற்படவே, தாயின் மரணத்திற்கு பழிதீர்க்க இதுவே சரியான சமயம் என முடிவெடுத்த ஆனந்த், சுதனின் வீட்டிற்கு சென்று சுதன் மற்றும் அவரின் தாய் கமலேஸ்வரி ஆகியோரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.

2 நாட்கள் கழித்து பெட்ரோல் ஊற்றி எரிப்பு:

பின் சுதன் குமாரின் மகன் சிறுவன் நிஷாந்தை வெளியே விட்டால், அவர் தன்னை அடையாளம் காண்பித்து கொடுத்துவிடுவார் என எண்ணி தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். இதனை செய்துவிட்டு சத்தமே இல்லாமல் இருந்து வெளியேறிய சங்கர் ஆனந்த், 2 நாட்கள் கழித்து வந்து கொலை செய்யப்பட்ட உடல்களில் பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கிறார். இதன் பின் அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியில் கடலூர் மக்கள்:

காவல்துறை அதிகாரிகள் தன்னை அடையாளம்காண வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் சென்னைக்கு தனது நண்பர் உதவியுடன் தப்பிச்சென்ற சங்கர் ஆனந்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவருடன் கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சாகுல் அமீதும் கைதாகி இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.