Germany Cops Uniform: பேண்ட் இல்லாமல் பணிக்கு வரும் காவலர்கள்; ஜெர்மனியில் சர்ச்சை சம்பவம்.. காரணம் என்ன?..!
அரசுக்கு நூதன எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், காவல் துறையினர் ஜெர்மனியில் வித்தியாசமான முறையில் செயல்பட்டது கவனத்தை பெற்றுள்ளது.
ஏப்ரல் 06, பெர்லின் (World News): ஜெர்மனியில் நாட்டு மக்களின் உள்நாட்டு அளவிலான பாதுகாப்பை உறுதி செய்ய, காவல்துறையினர் தீவிரமாக தங்களது பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு காவல்துறை நிர்வாகம் சார்பில் சீருடை வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6 முதல் 8 மாதமாக சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டிய ஆடை வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.
நூதன எதிர்ப்பு: இதனால் காவல்துறையினர் (Germany Boliver Cops Macklack of Uniforms Pant less) தங்களுக்கு ஆடைகளை கேட்டு அரசுக்கு பலவிதமான அழுத்தம் கொடுத்தும் பலனில்லை. இதனால் அதிருப்தியடைந்த சில காவலர்கள், தங்களை எதிர்ப்பை நூதன முறையில் தெரிவிக்கும் பொருட்டு அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இவை சிலநேரம் வேடிக்கையையும் ஏற்படுத்துகிறது. Minor Girl Dies by Suicide: 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; மனமுடைந்த சிறுமி தற்கொலை.. 10 நாட்கள் ஊசலாடி பிரிந்த உயிர்.!
கால் சட்டையின்றி பணிக்கு வரும் அதிகாரிகள்: இந்நிலையில், அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்த காவலர்கள், பணிக்கு மேல் சட்டை மட்டும் அணிந்து கால் சட்டை அணியாமல் வருகை தந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கால் சட்டை இன்றி வரும் காவலர்கள்:
காவலர்களின் நூதன எதிர்ப்பு: