CPR Saves a Snake's Life: மூர்ச்சையான பாம்புக்கு சிபிஆர் செய்து உயிர்கொடுத்து இளைஞர்; வைரலாகும் வீடியோ.!
விஷத்தன்மை அற்ற பாம்பு ஒன்றுக்கு இளைஞர் சிபிஆர் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்டோபர் 17, வதோதரா (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா (Vadodara) மாவட்டம், பிருந்தாவன் ரஸ்தா பகுதியில் பாம்பு ஒன்று ஆபத்தான நிலையில் கிடப்பதாக யாஷ் தத்வி (Snake Rescuer Yash Tadvi) என்ற பாம்பு மீட்பு வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அவர், பாம்பை கண்டபோது, அது அசைவற்று இருந்துள்ளது. Car Accident: கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து.. 2 சிறுமிகள் 4 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சோகம்..!
புத்துயிர் பெற்ற பாம்பு:
இதனையடுத்து, பாம்புக்கு உடனடியாக சிபிஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், பாம்பு சில நிமிடங்களில் உயிர்பெற்றது. மேலும், பாம்பின் வாய்மீது வாய் வைத்து ஊதி, பாம்புக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து தத்வி கூறுகையில், "பாம்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக எனக்கு அழைப்பு வந்தது. இதனால் நான் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, பாம்பு இருந்ததுபோல இருந்தது. 8-Year-Old Girl Rescued: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது குழந்தை.. 16 கி.மீ. தேடி மீட்ட காவலர்களுக்கு குவியும் பாராட்டு..!
மகிழ்ச்சி அடைந்தேன்:
அதனை கையில் எடுத்துப்பார்த்தபோது, பாம்பு மயக்க நிலையில் இருப்பது உறுதியானது. இதனால் சிபிஆர் செய்ய தொடங்கினேன். பாம்பு புத்துயிர் பெற்றபோது நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகிறேன். பின் பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது பிடிப்பட்ட பாம்பு விஷத்தன்மை அற்றது. ஆறுகள், ஏரிகள், குளங்களில் இவை பொதுவாக காணப்படும். இரவு நேரத்தில் தரைக்கு மேல் இருக்கும். தவளை, மீன்களை உணவாக சாப்பிடும்" என தெரிவித்தார்.
பாம்பின் உயிரை சில நிமிடங்களில் இளைஞர் காப்பாற்றிய காணொளி உங்களின் பார்வைக்காக:
எனினும் இந்த செயலை முன் அனுபவம் இல்லாதோர் மேற்கொள்ள வேண்டாம்.